தங்க முகையதீன்
———————-
வங்காளதேசம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த 2 நபர்கள் போலி கடப்பிதழ் மூலம் வெளிநாடு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்கள்.30.11.2025 ம் தேதி சென்னை பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, போலி கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஷிமுல் தாஸ் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் தனது வங்கதேச நாட்டு குடியுரிமையை மறைத்து ஸ்ரீவாஷ் கிருபாதாஸ் என்ற பெயரில் இந்திய கடவுச்சீட்டு பெற்று மலேசியாலிற்கு செல்வதற்காக முயற்சி செய்ததாகவும், இலங்கை நாட்டைச் சேர்ந்த வலன்தியா பீட்ரைஸ் என்பவர், போலி ஆவணங்கள் மூலம் தனது இலங்கை நாட்டு குடியுரிமையை மறைத்து இந்திய கடவுச்சீட்டு பெற்று இலங்கை செல்வதற்காக முயற்சி செய்ததாகவும், தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்ததின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு, போலி கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் காவல் ஆணையாளர் ராதிகா வழிகாட்டுதலின்படி, உரிய நடவடிக்கை எடுத்திட போலி கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை நடத்தி, ஷிமுல் தாஸ் மற்றும் வலநன்தியா பீடரைஸ், ஆகிய இருவரை (30.11.2025) கைது செய்தனர்.காவல் குழுவினரின் விசாரணையில், வங்கதேசத்தை சேர்ந்த ஷிமுல் தாஸ், என்பவர் 2017 ம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து, வங்கதேச கடவுச்சீட்டை பயன்படுத்தி சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளதும், பிறகு இந்திய ஆவணங்களான ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்று அதன் மூலம் இந்திய கடவுசீட்டு பெற்று தற்போது மலேசியாவிற்கு செல்ல முயன்ற போது பிடிபட்டது தெரியவந்தது. இதே போல, இலங்கையை சேர்ந்த வலன்தியா பீட்ரைஸ், என்பவரின் பெற்றோர் 1984ம் ஆண்டு இலங்கையிலிருந்து சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து குடியேறி, வலன்தியா பீட்ரைஸ் ஊட்டியில் பிறந்துள்ளார். பிறகு இந்திய ஆவணங்களான ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்று, அதன் மூலம் இந்திய கடவுசீட்டு பெற்று, தற்போது இலங்கைக்கு செல்ல முயன்ற போது பிடிபட்டதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் (30.11.2025)நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
போலி கடப்பிதழ் மூலம் மலேசியா மற்றும் இலங்கை செல்ல முயன்ற இரு வெளிநாட்டவர்கள் சென்னையில் கைது
