’யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீடு

டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீராம்  படத்தொகுப்பு செய்திருக்கிறார். தீனா, ராதிகா, சிவாஜி ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கார்த்திக் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார்.  சமூகத்திற்கு தேவையான கருத்தை தாங்கி உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது********

 இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், இயக்குநர் வி.இசட்.துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் பேசுகையில், “’யாரு போட்ட கோடு படத்தை தயாரித்தது சவால் நிறைந்த அனுபவமாக இருந்தது. மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் எப்படி தயாரித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எங்கள் பட தயாரிப்பில் நிறைய பிரச்சனைகள் இருந்தது. அது அனைத்தையும் சமாளித்து வெற்றிகரமாக தயாரித்ததற்கு நிறைய பேரின் ஒத்துழைப்பு இருக்கிறது. என் படக்குழுவுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு நன்றி, கலைஞர் டிவி சுந்தரம் சார் மற்றும் விநியோகஸ்தர் சாருக்கு. இந்த படத்தின்  CONCEPT ரொம்பவே வித்தியாசமாக இருக்கும், நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். உங்கள் ஒத்துழைப்பு தேவை, நன்றி.” என்றார்.

படத்தின் இயக்குநர் லெனின் வடமலை பேசுகையில், “வாழ்க்கையில் உச்சாகம் முக்கியம், எப்போதும் உச்சாகமாக இருக்க வேண்டும். இந்த படத்திற்கு ஆண்டவன் தான் இயக்குநர். ஆண்டவனுக்கும், எங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு தான் தயாரிப்பாளர். இயக்குநர் குழு ராஜேஷ் அண்ணன், 65 வயதில் இளைஞராக எனக்கு பக்கபலமாக இருந்தார். நான் இதில் கடைசி உதவி இயக்குநராக தான் பணியாற்றினேன். இந்த படத்தில் பெரிய நடிகர் நடிப்பதாக இருந்தது, பெரிய தயாரிப்பாளர்  ஆனால் அது கைவிடப்பட்டது. 10 வருடங்களாக படம் இயக்கப் போகிறேன், என்று கூறி ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தேன். இவன் எங்க படம் பண்ண போறான், உருப்பட போறான், என்று சொன்னார்கள். கேலி, கிண்டல், அவமானம் என நிறைய பார்த்து விட்டேன். ஆனால், அவை அனைத்தையும் ஒரு காட்சியாகவும், என்னை ஏளனம் செய்தவர்களை கதாபாத்திரங்களாக மட்டுமே பார்ப்பேன். என் மனதை மட்டும் பிடிங்கி ஆகாயத்தில் எரிந்து விடுவேன், அது அங்கேயே பத்திரமாக இருக்கும், நான் எதிர்கொள்ளும் காட்சிகள் முடிந்த பிறகு மீண்டும் என் மனது எனக்கு வந்துவிடும். ஒரு படம் இயக்குவதற்கு ஆயிரம் போராட்டம், படம் கிடைத்த பிறகு ஐயாயிரம் போராட்டம், படம் முடிந்த பிறகு பன்மடங்கு போராட்டம், இந்த போராட்டங்கள் அனைத்தையும் நான் காட்சியாக தான் பார்த்தேன், விளையாட்டாக எடுத்துக் கொண்டேன். ரசித்தேன், மனிதர்களை படித்தேன். ஒரு படம் பண்ண அசுர பலம் வேண்டும், இயக்குநர் தாஸ்னத்தில் இருப்பவர்களுக்கு அசுர பலம் வேண்டும். எங்கேரஜ் பண்றவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், கெட்ட வைபை தள்ளியிருக்க வேண்டும். டாக்ஸிக் மக்களிடம் இருந்து பாதி தள்ளி வைத்தாலே பாதி வெற்றி கிடைக்கும், முழுவதுமாக தள்ளி வைத்தால் எங்கேயோ போய் விடலாம்.அதனால், நான் டாக்ஸிக் மனிதர்களை தள்ளி வைத்திருக்கிறேன். இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல, கிழே அமர்ந்திருப்பவர்கள் தான். இந்த படத்திற்கு இரண்டு கண்களை போல் இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் செளந்தர்யன் மற்றும் இசையமைப்பாளர் ஜெயக்குமார் இசையமைத்திருக்கிறார்கள். இருவரது பாடல்களும் மிக சிறப்பாக வந்திருக்கிறது.