2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ட்ராக் ஏசியா கப் 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சைக்கிளிங் போட்டி நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பு நிகழ்வில் டாக்டர் அதுல்யமிஸ்ரா ஐ ஏ எஸ் (கூடுதல் தலைமை செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை), ஜே மேகநாதன் ரெட்டி ஐ ஏ எஸ், மணீந்தர் பால் சிங், எம். சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சைக்கிளிங் போட்டிக்கான சர்வதேச தரத்திலான தடகளத்தில் ட்ராக் ஏசியா கப் 2026 ஆம் ஆண்டிற்கான சைக்கிளிங் போட்டி நடைபெறுகிறது. ********
இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் முதல் முறையாக ட்ராக் ஏசியா கோப்பைக்கான சைக்கிளிங் போட்டி நடைபெறுகிறது. இது நம் அனைவருக்கும் பெருமிதமான தருணம்.
இந்த சைக்கிளிங் போட்டியில் இந்தியா, ஹாங்காங் , ஈரான், மலேசியா சீனா இந்தோனேசியா, கஜகஸ்தான், நேபாளம், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து , சிங்கப்பூர், இலங்கை மற்றும் சீனா தைபே ஆகிய 15 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்த விளையாட்டுப் போட்டியில் 30 அதிகாரிகள் – 60 தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவில் முதன்முறையாக சைக்கிளிங் போட்டியில் சர்வதேச அளவிலான ட்ராக் ஏசியா கப் 2026 ஆண்டிற்கான போட்டி தமிழகத்தில் நடைபெறுவது தமிழகத்திற்கு பெருமிதமான தருணம் ஆகும். இந்த சந்திப்பில் ட்ராக் ஏசியா கப் ( TRACK ASIA CUP 2026) போட்டிக்கான இலச்சினை (லோகோ)யும், ‘தீரன்’ எனும் பிரத்யேக சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

