பிரதமரின் பேச்சு, ராணுவ வீரர்கள் மத்தியில், பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. – ஐ.டி.பி.பி., தலைவர் தேஸ்வால்

-ஷேக்மைதீன்-

பிரதமர் மோடியின் பேச்சு, ராணுவ வீரர்கள் மத்தியில், பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது, என, ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை தலைவர், எஸ்.எஸ்.தேஸ்வால் தெரிவித்தார். டில்லியில் உள்ள சத்தர்பூர் பகுதியில், 10 ஆயிரம் படுக்கை வசதிகள் அடங்கிய, கொரோனா சிகிச்சை மையத்தை, டில்லி கவர்னர், அனில் பைஜால் மற்றும்  ஐ.டி.பி.பி.,  தலைவர் தேஸ்வால் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர், பத்திரிகையாளர்களிடம் தேஸ்வால் கூறியதாவது:

லடாக் பகுதியில், பிரதமர், மோடி சமீபத்தில் சென்று, ராணுவ வீரர்களிடம் பேசினார். அவரது பேச்சு, ராணுவ வீரர்கள் மத்தியில், பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நாட்டுக்காக எந்த தியாகத்தையும் செய்யும் மன நிலையில், உறுதியுடன் ராணுவத்தினர் உள்ளனர். ராணுவம், விமானப்படை, கடற்படை  துணை ராணுவ படை என அனைத்து பிரிவு வீரர்களும் நாட்டுக்காக பணியாற்றுவதில்
பெருமையுடன் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.