தமிழ்நாடு போக்குவரத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான மின்சார வாகன தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிஐஎஸ் ஏற்பாடு

தமிழ்நாடு போக்குவரத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான மின்சார வாகன தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் பிஐஎஸ் சென்னையில் இன்று ஏற்பாடு செய்தது ரெனால்ட் நிசான் டெக்னாலஜி மற்றும் பிசினஸ் சென்டர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப விதிமுறைகள் மேலாளர் திரு விஜய் தினகரன், – தொழில்நுட்ப விதிமுறைகள் தலைவர் திரு ராஜேந்திர கிலே ஆகியோர் முறையே தரநிலைகளின் மின் இயக்கம், சார்ஜிங் உள்கட்டமைப்பு குறித்து பங்கேற்பாளர்களிடம் உரையாற்றினர். இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென்மண்டல துணைத்தலைமை இயக்குநர் விஞ்ஞானி திரு யுஎஸ்பி யாதவ் முக்கிய  உரையாற்றினார். அவர் தனது உரையின் போது,சமீபத்திய ஆண்டுகளில்,  மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதை அதிகரிக்க இந்திய அரசு தொடர்ச்சியான கொள்கை முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.. சென்னை அலுவலக இயக்குநர் விஞ்ஞானி  திருமதி ஜி பவானிநிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார்.   இந்திய தர நிர்ணய அமைவனத்தின் விஞ்ஞானிகள் திருஜீவானந்தம்,  திரு ஆகஸ்ட் துபே,  திரு நித்தேஷ் குமார் ஜெயின்,  திரு. மித்ராசென் வர்மா, திரு வெங்கடநாராயணன்ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழ்நாடு மாநில போக்குவரத்து நிறுவனங்களின் சுமார் 38அதிகாரிகள், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023-ஐ திறம்பட செயல்படுத்த உதவும் மின்சார வாகனங்கள் சார்ஜிங் தரநிலைகள் குறித்த இந்திய தரநிலைகள் குறித்து விழிப்புணர்வு பெற்றுள்ளனர்