உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை கொலை செய்த மனிதத்தன்மையற்ற கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் -சரத்குமார்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநிலங்களில்விவசாயிகள் நீண்ட நாட்களாக தீவிரமாக போராடி வரும்நிலையில், அதிகார வர்க்கத்தில் உள்ள கயவர்கள்உத்திரப்பிரதேசம், லக்கிம்பூர் பகுதியில் போராட்டம் நடத்தியவிவசாயிகள் மீது சற்றும் மனிதத்தன்மையின்றி காரை ஏற்றிபடுகொலை செய்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும்அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மனித மாண்புக்கே …

உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை கொலை செய்த மனிதத்தன்மையற்ற கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் -சரத்குமார் Read More

குலசேகரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த சரத்குமார் வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் பேரூராட்சி வணிகநிறுவனங்கள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவகல்லூரிகளும், அமைக்கப்பெற்ற சிறந்த பகுதியாக இயங்கிவருகிறது. குலசேகரத்திற்கு சுமார் 10 கி.மீதொலைவிற்குள்ளாக திற்பரப்பு அருவியும், பேச்சிப்பாறைஅணையும், பெருஞ்சாணி அணையும், மாத்தூர் தொட்டிப்பாலமும், ஆதிகேசவப் பெருமாள் கோயிலும், மிகவும்புகழ்பெற்ற சிவ ஆலயங்களும் அமைக்கப்பெற்று, தினசரிவெளியூரை சேர்ந்த எண்ணற்ற மக்கள் வந்து இயற்கையைகண்டு களித்து செல்லும் சிறந்த சுற்றுலா மையமாகவும்அமைந்துள்ளது. குலசேகரம் பகுதியை மையமாகக்கொண்டு தினச்சந்தைஇயங்குவால், கேரளா மாநிலத்தை சேர்ந்த வணிகர்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வருகை புரிகிறார்கள்.நகரின் முக்கிய வருவாய் ஆதாரமாகவும்,  தமிழ்நாட்டில்ரப்பர் விலை நிர்ணயம் செய்யப்படும் பகுதியாகவும்செயல்படும், இப்பகுதியைச் சார்ந்தே ரப்பர் கொள்முதல்மையங்களும் இயங்கி வருகின்றன.  இத்தனை சிறப்புஅம்சங்கள் கொண்ட குலசேகரம் பஞ்சாயத்து பகுதி, வளர்ச்சி குறைந்த பகுதியாக காணப்படுவதுஏற்புடையதல்ல. குலசேகரத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்துவதற்கும், நிர்வாக வசதிக்காகவும் குலசேகரம்பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது அவசியம்என்ற அடிப்படையில், குலசேகரம் பேரூராட்சி அருகிலுள்ளதிற்பரப்பு பேரூராட்சி, பொன்மனை பேரூராட்சியின் ஒருபகுதி, அயக்கோடு ஊராட்சி ஆகியவற்றை இணைத்துகுலசேகரம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் எனஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழகஅரசை வலியுறுத்துகிறேன்.  

குலசேகரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த சரத்குமார் வேண்டுகோள் Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழா

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு நேற்று (31.08.2021 – செவ்வாய்க்கிழமை)கட்சியின் தலைமை அலுவலகத்தில் இயக்கத்தின் நிறுவனத்தலைவர் புரட்சிதிலகம் திரு.ரா.சரத்குமார் அவர்கள் தலைமையில்இயக்கத்தின் கொடியேற்றி, நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி, நிர்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு, இயக்கத்தின்காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக S.குருமூர்த்தி செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளராக கார்த்திக்கும் நியமனக்கடிதம் வழங்கப்பட்டது. பொருளாளர் .A.N.சுந்தரேசன் முன்னிலையில், சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் D.மகாலிங்கம்  ஏற்பாட்டில், விழுப்புரம் மண்டல அமைப்புச் செயலாளர் செந்தில்முருகன், அரசியல் ஆலோசகர் A.D.சந்திரபோஸ் ஆகிய மாநில நிர்வாகிகளும், வட சென்னைமேற்கு R.எட்ராஜா, தென் சென்னை மத்தியம் கிண்டிதிரு.இரா.வேணு, மத்திய சென்னை மத்தியம் புரசைதிரு.D.நாகப்பன், திருவள்ளூர் வடக்கு மணலிதிரு.M.பாலகிருஷ்ணன், மத்திய சென்னை மேற்குதிரு.M.A.ஆண்டனி, வட சென்னை கிழக்கு ராயபுரம்திரு.K.விஜயன், செங்கல்பட்டு தெற்கு திரு.A.பொன்வேல், செங்கல்பட்டு கிழக்கு தையூர் ரமேஷ், விழுப்புரம் கிழக்குதிரு.கோ.தசரதன், விழுப்புரம் வடக்கு திரு.G.ஆறுமுகம் கடலூர்தெற்கு திரு.சூர்யபிரசாத், திருவள்ளூர் மேற்கு திரு.சந்தனக்குமார், திருவள்ளூர் கிழக்கு திரு.G.K.பெருமாள் ஆகிய மாவட்டச்செயலாளர்களும், பிற நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழா Read More

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தீவிர நடவடிக்கை தேவை – சரத்குமார்

நடப்பாண்டு தமிழகத்தின் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு முதன்முறையாக தாக்கல் செய்த காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டில், கொரோனா சமயத்தில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகளைசீர்செய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் குறைவாகஇருப்பதாகவே தெரிகிறது. தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைப்பு, சிங்காரச்சென்னை 2.0 திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும்திட்டம், மதுரையில் மெட்ரோ அமைக்க ஆய்வு, தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் டைடல் பூங்கா அமைப்பு, தொல்லியல் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு, சட்டமன்ற தொகுதிமேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு என்பது உள்ளிட்ட சிலவரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், தமிழகத்தின்நிதிநிலையை சீரமைப்பதற்கான செயல்திட்டங்கள் குறித்தமக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றே சொல்லலாம்.  வெள்ளை அறிக்கையில் அரசுப்பேருந்து 1 கி.மீ ஓடினால் ரூ.59நஷ்டம் ஏற்படுகிறது என அறிவித்துவிட்டு, தற்போது பட்ஜெட்டில்1000 பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.623.59 கோடி ஒதுக்கியதுநியாயமாக தெரியவில்லை. நிதிநிலையை சீர்செய்யஇருப்பவர்களிடம் வரி பெற்று இல்லாதவர்களிடம் சேர்ப்போம் எனஅறிவித்து, அதற்கான செயல்திட்டங்களை பட்ஜெட்டில்முன்வைக்காதது ஏன் என புரியவில்லை. ஏற்கெனவே நாங்குநேரிதொழில்நுட்பபூங்கா செயல்படாதநிலையில், மீண்டும்நெல்லையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்என்ற அறிவிப்பு ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது. வெள்ளை அறிக்கைக்கும், பட்ஜெட் தாக்கலுக்கும் இடையேயானவேறுபாடுகளை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். இன்றுதாக்கல் செய்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க சாராம்சங்கள்இருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமான அறிவிப்புகளை வெளியிட்டு இன்னும் சிறப்பாகஅமைத்திருக்கலாம். இருப்பினும், தமிழக அரசு இனி வருங்காலத்தில் விரைவாகஉற்பத்தியை பெருக்கும் வகையிலான சிறந்தசெயல்திட்டங்களையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கக்கூடிய திட்டங்களையும் அறிவித்து, தமிழகத்தைவளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென அகிலஇந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.  

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தீவிர நடவடிக்கை தேவை – சரத்குமார் Read More

மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் – சரத்குமார்

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு பள்ளிகள்செயல்படாமல், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உட்பட அனைவரும்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்காலகனவுடன் உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களின்முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், மத்திய அரசு கொரோனா 3 – வது அலை குறித்தமுன்னெச்சரிக்கை இன்றி, மாணவர்களின் பின்புலத்தில் நிலவும்ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள் பற்றிய கவலையின்றி, செப்டம்பர் 12 – ந்தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பதுமருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மாணவர்களைஅதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.  சமத்துவமற்ற கல்வி, சரிசமமற்ற பாடத்திட்டம், சீரற்ற கல்விகட்டமைப்பு என்றிருக்கும்போது, மாநில பாடத்திட்டங்களில்பயிலும் மாணவர்களுக்கு மத்திய பாடத்திட்டத்தின் கீழ் ஒரேவகையான தேர்வு நடத்தும் இத்தகைய போட்டி நிலை உலகில்எந்த நாடுகளிலும் கிடையாது. பல்வேறு மொழிகள், மரபுகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் கொண்ட பல மாநிலங்களைஒருங்கிணைத்து கூட்டாட்சியாக  இந்திய ஆட்சிநடைபெறுகிறது.  ஆனால், மாநில அதிகாரத்திற்குட்பட்டகல்விதுறையில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முனைவதுமுற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கிடையே நிலவும் சமூக, பொருளாதார வேறுபாடுகளை களையாமல், சமத்துவத்தைஉருவாக்காமல், எளிய மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும்தடுப்பாக நீட் அமைந்துள்ளது.  தேர்வில் அதிக மதிப்பெண் பெற, வசதியுள்ள மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில்லட்சக்கணக்கில் செலவு செய்து பயில்வார்கள். வசதியற்றமாணவர்களுக்கு தனியார் பயிற்சி சாத்தியமற்றது.

மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் – சரத்குமார் Read More

வியாபாரி முருகேசன் மீது போலீஸ் தாக்குதல் கொடூரத்தின் உச்சமென கண்டித்தார் சரத்குமார்

சேலம் மாவட்டம் இடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் வியாபாரியான முருகேசன்  ஊரடங்கு விதிகளை மீறி நண்பர்களுடன் சேர்ந்து மது  அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, இடையப்பட்டி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் சிக்கியதில், ஏத்தாப்பூர் காவல் துறை சிறப்பு காவல் …

வியாபாரி முருகேசன் மீது போலீஸ் தாக்குதல் கொடூரத்தின் உச்சமென கண்டித்தார் சரத்குமார் Read More

வங்கிக்கடன் திரும்ப பெற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் – சரத்குமார்

கொரோனாவால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அமல்படுத்தியிருக்கக்கூடிய ஊரடங்கை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றால், பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவும், தொழில் இல்லாமல், வணிகம் இல்லாமல், வியாபாரம் இல்லாமல்  மக்கள் வேதனையில் உழன்று வாடும் உணர்வை புரிந்திருப்பார்கள். வேலைவாய்ப்பு இல்லாமல், வருமானமில்லாமல் மக்களின் வாழ்வாதாரம் …

வங்கிக்கடன் திரும்ப பெற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் – சரத்குமார் Read More

பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்கிறார் சரத்குமார்

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மசேஷாத்ரி பாலபவன்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலன்கடந்த பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்அளித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும்வேதனையை உண்டாக்கியுள்ளது. கல்வி ஸ்தாபனங்கள் மாணவர்களுக்கு அடிப்படை ஒழுக்கத்தைகற்பிக்கவும், சமூகத்தில் நன்மனிதர்களாக உருவாக்கிடவும், உலகஅறிவை பெருவதற்கும் அமைக்கப்பட்ட தடம். கட்டுப்பாடானஒழுக்கத்துடன், மனிதபண்பையும், மாண்பையும் வளர்க்கும்கல்வியை பெறுவதற்காக கல்வி நிறுவனங்களை நம்பிபெற்றோர்கள் முழுநேரம் பிள்ளைகளை பள்ளிக்குஅனுப்புகிறார்கள்.  அப்பேற்பட்ட கல்வி நிறுவனத்தில் இத்தகைய அவல நிலைஏற்படுகின்றது என்று சொன்னால், மாணவர்களின் எதிர்கால கனவுசிதைந்துவிடாதா?  ஒருசில கயவர்களின் அட்டூழியத்தால்ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கும் இச்சம்பவம் தலைகுனிவுஏற்படுத்தியுள்ளது என்பதால் உன்னத பணி செய்யும்ஆசிரியர்களின்  வேதனையையும் நான் அறிகிறேன். வாழ்க்கைப்பயணத்தின் குழந்தை பருவம் முதல் இளைஞர் பருவம்வரை பெரும்பாலான நாட்களை எடுத்துக்கொள்ளும் கல்வியைபெற செல்லும் மாணவிகள் இத்தகைய பாலியல் கொடுமைகளை  அனுபவித்து கொண்டும், சகித்து கொண்டும் இருக்க வேண்டியஅவசியம் கிடையாது.  முதலில் பெற்றோர்களும், மாணவர்களும் கல்வி நிலையங்களில்நடந்தேறும் குற்றங்களை தைரியமாக, வெளிப்படையாகதெரிவிக்கும் நிலைக்கு வர வேண்டும். தனியார் பள்ளிகளில் மாற்றுசான்றிதழ் (TC) வழங்கி மாணவர்களின் எதிர்காலத்தைகேள்விக்குறியாக்கிவிடுவார்கள் என தனியார் பள்ளிகள் மிரட்டல்பிம்பத்தை வைத்துள்ளனர். அந்த மிரட்டல் பிம்பத்தை கிழித்திடகுற்றங்களை எடுத்துச் சொல்ல துணிச்சல் வர வேண்டும். பெற்றோர்களும், மாணவர்களும் புகார்களை வெளிப்படையாகதெரிவிக்கக்கூடிய சூழலை தமிழக அரசு உறுதி செய்வதுடன், மாணவர்களின் கல்வி பாதிக்காதவண்ணம் பாதுகாப்பானமுறையில் கல்வியை தொடர வழிவகுக்க வேண்டும்.பல ஆண்டுகளாக இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுகிறது எனகுற்றவாளிகள் வெளிப்படையாக  ஒப்புக்கொள்ளும் போது, கல்விநிறுவனத்தில் நடந்தேறிய தவறுகளை கவனத்தில் கொள்ளாமல்அலட்சியமாக செயல்பட்ட நிர்வாக தலைமை மீதும் நடவடிக்கைஎடுத்தால் தான் வருங்காலத்தில் பாதுகாப்பான கல்வி உறுதிசெய்யப்படும்.  கொரோனா சமயத்தில் எவ்வளவோ நெருக்கடிகள், எத்தனையோகஷ்டங்கள், அத்தனையும் பொறுத்து கொண்டு பிள்ளைகளின்ஆன்லைன் வகுப்புகளுக்காக ஆண்ட்ராய்டு அலைபேசி, லேப்டாப், இணையதள வசதி, கல்விக்கட்டணம் என தங்கள் சக்திக்கு மீறிஅனைத்து படிப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் பெற்றோர்கள்மன உளைச்சலில் உழலச் செய்யக்கூடாது. நெஞ்சு பொறுக்காத இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் மீது தமிழகஅரசு தனிக்கவனம் செலுத்தி கயவர்கள் யாராக இருந்தாலும், எந்தசமுதாயத்தை சார்ந்திருந்தாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும்அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அகில இந்தியசமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்கிறார் சரத்குமார் Read More

மின்கம்பம் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு – மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சரத்குமார் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், கூந்தங்குளம் பொத்தையடி சாலையில் பொத்தையடிக்கு வடக்கே சுமார் 1 கி.மீ முன்பாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் 4 அடி உயரத்திற்கு சரிவான நிலையில் இருந்ததால், அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் அந்த மின்கம்பத்தில் மோதி லிங்கத்துரை என்பவர் உயிரிழந்திருப்பதும், பூரணச்சந்திரன் …

மின்கம்பம் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு – மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சரத்குமார் கோரிக்கை Read More

மருத்துவப் படிப்பிற்கான நுழைவாயிலை வெளிப்படைத் தன்மையுடன் திறந்து வைக்க சரத்குமார் கோரிக்கை

நீட் தேர்வு வேண்டாம் என கருதும் தமிழ்நாட்டில், கொரோனா காலக்கட்டத்திலும் நுழைவுத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்றிருந்த தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிவுகளை தவறாக வெளியிட்டதிலிருந்தும், விடைகளை குறிக்கும் விடைத்தாள்கள் (OMR Sheet) மாற்றப்பட்டுள்ளதாக மாணவர்கள் சிலர் புகார் …

மருத்துவப் படிப்பிற்கான நுழைவாயிலை வெளிப்படைத் தன்மையுடன் திறந்து வைக்க சரத்குமார் கோரிக்கை Read More