உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை கொலை செய்த மனிதத்தன்மையற்ற கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் -சரத்குமார்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநிலங்களில்விவசாயிகள் நீண்ட நாட்களாக தீவிரமாக போராடி வரும்நிலையில், அதிகார வர்க்கத்தில் உள்ள கயவர்கள்உத்திரப்பிரதேசம், லக்கிம்பூர் பகுதியில் போராட்டம் நடத்தியவிவசாயிகள் மீது சற்றும் மனிதத்தன்மையின்றி காரை ஏற்றிபடுகொலை செய்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும்அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதுமனித மாண்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியஇச்சம்பவத்தில் ஈடுபட்ட மத்திய இணை அமைச்சர் அஜய்மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட அனைவரின்குற்றங்களும் எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்படாமல், இந்தியாவில் இதுபோன்ற அவலநிலை இனி நிகழாதவாறு, வாகனத்தை மேலேற்றி உயிர் பறிக்கும் கொடூர செயல் புரியஎவருக்கும் துணிச்சல் வராத வகையில், இந்தியஅரசியலமைப்பு சட்டத்தில், குற்றங்களுக்கு வழங்கப்படும்தண்டனைகளை விட மேலான உச்சபட்ச தண்டனை வழங்கநீதிபதிகள் முன்வர வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும்பாதுகாப்பு வழங்கும் சட்டமாக அது அமைய வேண்டும்.  இந்தியா விவசாயத்தை முதுகெலும்பாக கொண்ட, பன்முகத்தன்மையுடன் செயல்படும், மிகப்பெரிய ஜனநாயக நாடு.இந்தியாவின் மாண்பு புத்தக வரிகளாகவும், அரசியல்வாதிகள்மேடையில் முழுங்குவதற்காகவும்,  சட்டத்தின் பக்கங்களை நிரப்புவதற்காகவும் மட்டுமா எழுதப்பட்டது? நடைமுறையில்சாத்தியப்படாதா? அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் போராட்டங்களைகொலை மிரட்டல் மூலம் ஒடுக்க நினைப்பது ஜனநாயகமாண்புக்கு முற்றிலும் எதிரானது என்பதால், இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. தற்போதே இந்த சம்பவத்தில்துரிதமாக, சரியான முடிவெடுப்பது அவசியம். அதன் அடிப்படையில், அறவழியில் போராடிய விவசாயிகள்மீது துப்பாக்கிச்சூடு, கொலை மிரட்டல், போராட்டத்தில்வன்முறை என அச்சுறுத்தலை உண்டாக்கி சட்டம்ஒழுங்கைசீர்குலைத்த அதிகாரிகள் மீதும், அரசியல்வாதிகள் மீதும்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.