கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்- காங்கிரஸ் வாக்குறுதி.. திணறும் மற்ற கட்சிகள் !

உத்தரகாண்ட் சட்டப்சபைத் தேர்தலையொட்டி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாகனங்களில் சென்றும், மக்களின் வீடுகளுக்கு சென்றும் வாக்குசேகரித்தார். இதனிடையே அங்கு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதனை நிறைவேற்றுவோம் வாக்காளர்களுக்கு நான்கு வாக்குறுதிகளை ராகுல்காந்தி …

கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்- காங்கிரஸ் வாக்குறுதி.. திணறும் மற்ற கட்சிகள் ! Read More

நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை முதல்வர் ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு

கற்பகம் என்ற பெயரில் பனை வெல்லத்தை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை ராமநாதபுரம் சாயல்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும். கற்பகம் எனப்படும் கருப்புக்கட்டியில் மனித இரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயமின், ரிபோபிளேவின் என்ற B வைட்டமின்களும், …

நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை முதல்வர் ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு Read More

நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் அழகிரி பாராட்டினார்

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் மக்கள் நலன்சார்ந்து பல்வேறு திட்டங்கள் நிறைவேறுகிற வகையில்அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இன்றைக்குசட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்அவர்கள் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறுகிற வகையில்மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார். இதற்காகத் தமிழக முதலமைச்சரை மனதாரப்பாராட்டுகிறேன். கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வுக்குவிலக்கு பெறுவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டுநிறைவேற்றப்பட்டு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காகஅன்றைக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் பெற்றிருந்தஅ.தி.மு.க. அதற்காக தீவிர முயற்சிகளைமேற்கொள்ளவில்லை. மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதவேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டத் திருத்தம் போன்றபா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில்ஆதரவாக வாக்களித்த போது, நீட் தேர்வுக்கு விலக்கு பெறுகிறவகையில் முன்நிபந்தனைகளை விதித்திருக்கலாம். ஆனால், மடியில் கனம் இருக்கிற காரணத்தினாலேமுதுகெலும்பில்லாத அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. அரசிடம்நிபந்தனை விதிக்க முடியவில்லை. அதற்காக தமிழகத்தில்உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களைவஞ்சிக்கிற வகையில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. நீட்தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதாஉள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது கூட, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ்என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட அவலம்நிகழ்ந்துள்ளது. இந்த தற்கொலைகளுக்கு  அ.தி.மு.க. ஆட்சிதான் பொறுப்பாகும்.  கடந்த சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்குகோரும் தீர்மானங்கள் மத்திய அரசால் திருப்பிஅனுப்பப்பட்டதை தமிழக சட்டப் பேரவைக்குத்தெரிவிக்காமல் இரண்டு ஆண்டுகள் மூடி மறைத்ததுமிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும். இதன்மூலம் தமிழகசட்டசபையின் உரிமைகளை அவமதித்த குற்றத்தைஅ.தி.மு.க. அரசு செய்தது. இதற்காக ஜனநாயகத்தில் எவ்வளவுபெரிய தண்டனையை வேண்டுமானாலும் வழங்கலாம். அத்தகைய படுபாதகச் செயலை செய்தவர்கள் இன்றைக்குதற்கொலை செய்து கொண்ட மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்றமாணவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டுமென்று கோருகிறார்கள். கடந்த காலஅ.தி.மு.க. ஆட்சியின் போது அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போது, குறைந்தபட்சம் இரங்கல் செய்தி கூட வெளியிடாதவர்கள்இப்போது இழப்பீட்டுத் தொகை கேட்பது அப்பட்டமானசந்தர்ப்பவாத செயலாகும். அதேபோல, நீட் தேர்வு காரணமாக கிராமப்புறத்திலே படிக்கிறஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின்மருத்துவ படிப்பிற்கான கனவுகளைச் சிதைத்துச் சீரழித்தஅ.தி.மு.க.வினருக்கு உரிய தண்டனையை கடந்த மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில்இருக்கிறது. இதுகுறித்து சட்டம் இயற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சமஉரிமை இருக்கிறது. இந்நிலையில்நீட் தேர்வு குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்குமுன்பாக மாநில அரசுகளை கலந்தாலோசனை செய்துஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக, தன்னிச்சையாக மாநில உரிமைகளை பறிக்கிற வகையில்பொது பட்டியலில் உள்ள கல்வி சம்மந்தமான நீட் தேர்வுகுறித்து மத்திய பா.ஜ.க. அரசு சட்டம் இயற்றுவது கூட்டாட்சிதத்துவத்திற்கு கேடு விளைவிப்பதாகும்.  எனவே, நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு பெறுகிறவகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கிற மசோதாவிற்குகுடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு உரியஅழுத்தம் தருகிற அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர்மேற்கொள்வார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்றகூட்டணி கட்சி உறுப்பினர்கள் மத்திய பா.ஜ.க. அரசுக்குதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின்வழிகாட்டுதலின்படி  உரிய அழுத்தத்தைக் கொடுப்பார்கள். இதன்மூலம், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தரவிலக்கு பெறுகிற  தமிழக அரசின் முயற்சிகள் நிச்சயம் வெற்றிபெறும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து நீட் தேர்விலிருந்துவிலக்கு பெறுகிற வகையில் தமிழக முதல்வர் எடுத்திருக்கிறநடவடிக்கை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெறும் என்பதை உறுதியாகக்கூற விரும்புகிறேன்.

நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் அழகிரி பாராட்டினார் Read More

காங்கிரஸ் தலைவரை சந்தித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான்

இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்தார்.  மாநில நிர்வாகிகள் ஆ.கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, செந்தமிழ் அரசு,  விஜய் சேகர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ஜெ.டில்லிபாபு, எம்.பி.ரஞ்சன் குமார், நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத், பெரம்பூர் நிசார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

காங்கிரஸ் தலைவரை சந்தித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் Read More

மோடியால் சாத்தியம்’ சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து ப. சிதம்பரம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர …

மோடியால் சாத்தியம்’ சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து ப. சிதம்பரம் Read More

ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்போக்கை கைவிட வேண்டும் – கே.எஸ்.அழகிரி

கொரோனா பரவலுக்கு முன்பே, மத்திய பா.ஜ.க. ஆட்சியின் தவறானகொள்கையால் இந்தியாவில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்றன. இதன்பிறகு, கடந்த 2020 மார்ச் 24 ஆம் தேதி கொரோனா காரணமாக பொது முடக்கம்அமல்படுத்தப்பட்ட பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி, மோடி அரசின்அக்கறையின்மையால் இன்றைக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களில் பணியாற்றிய 10 கோடியே 20 லட்சம் பேரின்வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு,சிறு மற்றும் நடுத்தரநிறுவனங்களின் பங்கு 30 சதவீதமாகவும், ஏற்றுமதியில் இவற்றின் பங்கு40 சதவீதமாகவும் இருந்தது. அதோடு90 சதவீதம் அமைப்புசாராதொழிலாளர்கள்  பணியாற்றி வந்தனர். இந்த துறையின் வளர்ச்சி 10 சதவீதமாக இருந்தது.  கொரோனாவின் இரண்டாவது அலையின் போது குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளைநிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது. இரண்டாவது அலைதொடங்கிய கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இந்தநிறுவனங்கள் மேலும் சீரழிவைச் சந்தித்தன. முதல் அலையின் போது குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால்அறிவிக்கப்பட்ட சலுகைகள் பாதி அளவுக்குக்கூட நிறைவேறவில்லை. அதேபோல, இப்போதைய அறிவிப்புகளும் எதிர்காலத்தில் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிலைமை என்ன என்பது குறித்ததரவுகளோ, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான யோசனைகளோ மத்திய அரசிடம் இல்லை. இந்தியாவில் குறு, சிறுமற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமாகஇருப்பதாகவும், இதில் 40 சதவீத நிறுவனங்கள் நிதி ஆதாரம் இன்றி இருப்பதாகவும் இந்த மாத தொடக்கத்தில் உலக வங்கி அறிவித்த பிறகு 500 மில்லியன் டாலர் அளவுக்கு உதவித் திட்டத்தை மத்திய அரசுஅறிவித்தது. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாதந்தோறும்மூடப்பட்ட வருவதால், பலரும் வேலை இழந்து வருகின்றனர். உத்தரவாதம் இல்லாத கடனாக ரூ 3 லட்சம் கோடியை இந்தநிறுவனங்களுக்கு வழங்குவதாகக் கடந்த ஆண்டு மத்திய அரசுஅறிவித்தது. ஆனால், அதில் பாதி அளவு கூட வழங்கப்படவில்லை. நாடுமுழுவதும் 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் உள்ளன. இதில் பதிவு செய்யப்பட்டவை 25 லட்சத்து 13 ஆயிரம் மட்டுமே. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 60 சதவீதம்தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள்கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசு கைவிட்டதால், தமிழகத்தில் 44 சதவீத குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டைநிறுத்தியுள்ளன. 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவில் 50 லட்சம் நிறுவனங்கள்மட்டுமே நிதி தொகுப்பைப் பெற்றுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கைதூக்கிவிடப் பலதிட்டங்களை மத்திய அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களையும், கொள்கைகளையும் மாநில அரசுகளுடன்இணைந்து செயல்படுத்தி, மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தநிறுவனங்களையும், இவற்றை நம்பியிருக்கும் 10 கோடியே 20 லட்சம்பேரின் வாழ்வாதாரத்தையும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுமீட்டெடுக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை, குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் பணியை தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். வழக்கம்போல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தைஅணுகாமல், தமிழகத்துக்கு மோடி அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (கே.எஸ். அழகிரி)

ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்போக்கை கைவிட வேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்ற காங்கிரஸ்

ஆளுநர் உரையை தமிழக அரசின் கொள்கை விளக்க உரையாகத் தான்கருத வேண்டும். மூலம்  முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்தலைமையிலான தமிழக அரசு எத்தகைய வளர்ச்சிப் பாதையில்பயணிக்கப் போகிறது என்பதை ஆளுநர்  உரையில் மிகத் தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிதமிழகம் பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழகஆளுநரின் உரையை, வளர்ச்சிக்கான உரை என்ற முறையில் வரவேற்கக்கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கோவிட்தடுப்புப் பணிகள் தொய்வுற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுபெற்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற கட்சித் தலைவராகஇருந்த போதே, திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்ற எல்லாபணிகளையும் விட கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரானபணிகளுக்கே முன்னுரிமை வழங்கியதை அனைவரும் அறிவார்கள். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடனே கொரோனா பெருந்தொற்றைஎதிர்கொள்ள வேண்டிய சவால் மிக்க பணியை மிகுந்த துணிவுடன்பல்வேறு உத்திகளைக் கையாண்டு இன்றைக்கு அதைக்கட்டுப்படுத்துவதில் சாதனைகள் புரிந்துள்ளதை எவரும் பாராட்டாமல்இருக்க முடியாது. அதேபோல, தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே இருந்ததயக்கம் நீக்கப்பட்டு, தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழக அரசின் கொரோனா எதிர்ப்புநடவடிக்கைகளில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைவெளிப்படுத்துகிறது. அதேசமயம், தமிழகத்திற்குத் தடுப்பூசிவழங்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறபோக்கையும் காண முடிந்தது. இதையும் எதிர்கொண்டு தடுப்பூசிபோடுகிற எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தமிழகஅரசின் நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியவை. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொது நிவாரண நிதிக்கு 335 கோடி ரூபாய் பெற்றதே மிகப்பெரிய சாதனையாகும். இந்தப் பணியில்முதலமைச்சரின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் அளித்த ஒத்துழைப்பே, முதலமைச்சர் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையைவெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்டகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரண தொகையை, இரண்டு தவணைகளாக மொத்தம்  8,393 கோடி ரூபாய் அளவுக்குவழங்கியதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த தமிழகமுதலமைச்சரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் தமிழகத்தை அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு நோபல்பரிசு பெற்ற எஸ்தர் ட‡ப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட உலக அங்கீகாரம் பெற்றபொருளாதார நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவைஅமைத்துள்ளது மிகச் சரியான நடவடிக்கையாகும். இவர்களதுஆலோசனை தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருக்கும்என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடந்த அ.தி.மு.க. ஆட்சி 5 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமையை வைத்து விட்டுச் சென்றுள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டியகடுமையான பணி இன்றைய தமிழக அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில் சமூக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டியபொறுப்பும் இருக்கிறது. இதை உரிய முறையில் எதிர்கொண்டு நிதிவருவாயைப் பெருக்கி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிச்சயம்நிறைவேற்றப்படும் என்ற சூழல் இருப்பதை ஆளுநர் அறிக்கைதெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2014 ஆம்ஆண்டு வரை தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லை. மத்தியில்பா.ஜ.க. ஆட்சி செய்த 2017 ஆம் ஆண்டுதான் முதன் முதலில்தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. அன்றைய அ.தி.மு.க. ஆட்சியால் அதைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில் நீட் தேர்வினால்தமிழக மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கிறமாணவர்களின் எதிர்காலம் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளானது என்பதைஅனைவரும் அறிவார்கள். இத்தகைய பாதிப்புகளை மதிப்பிடவும், அதிலிருந்து தமிழக மாணவர்களைப் பாதுகாக்கவும் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின்பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ​(கே.எஸ். அழகிரி)

நீட் தேர்வைத் தடுக்கும் வகையில்சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிட்டுள்ளதை வரவேற்ற காங்கிரஸ் Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைப் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு திருநாவுக்கரசர் கண்டனம்

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு இந்திய நாடுமுழுவதும் பரவிக்கிடக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியனவற்றைதனியாருக்கு விற்க, தனியார்மயமாக்க எடுத்து வரும்நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது.  வருத்தத்திற்குரியது, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1937-ல்தொடங்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போதுதமிழ்நாட்டில் சுமார் 1500-க்கும் மேற்பட்டகிளைகளோடு குக்கிராமங்கள் வரை பரவலாகசெயல்படக் கூடிய வங்கியாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது.  அதே போல் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவங்கியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ​வங்கிகள் இணைப்பு என தொடங்கி சிலவங்கிகளை பெரிய வங்கிகளோடு இணைத்து, தற்போதுபெரிய வங்கிகளை தனியார் மயமாக்குவதால்வங்கிகளின் வரவு செலவு மற்றும் நாட்டின்பொருளாதாரத்தை ஒரு சில தனிப் பெரும்முதலாளிகளிடம் ஒப்படைத்து மக்கள் தனியாரிடம்கையேந்தும் நிலைக்கு தள்ளப்படப் போகிறார்கள்,  ​காங்கிரஸ் அரசு அன்னை இந்திராகாந்திஅம்மையார் தலைமையில்  தனியார் வங்கிகளைதேசிய உடமையாக்கியது.  ஆனால் இன்றோ மத்தியபா.ஜ.க அரசு முற்றிலும் எதிர்மறையாகதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை மீண்டும் தனியார்மயமாக்கி இந்த தேசத்தை 40 ஆண்டுகளுக்குபின்னோக்கி இழுத்துச் செல்ல முனைகிறது.  இந்நிலையில் வங்கிகளில் பணியாற்றும்பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள், லட்சக்கணக்கான அவர்களின் குடும்பத்தினர்மட்டுமின்றி பல கோடி மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே வங்கிகள் தனியார்களுக்கு விற்க இருக்கும்முடிவை  பொது மக்களின் நலன் கருதி மத்திய அரசுஉடனடியாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைப் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு திருநாவுக்கரசர் கண்டனம் Read More

அம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு, இலங்கை அரசு குத்தகைக்கு விட்டிற்பது தமிழகத்திற்கு ஆபத்தாகுமென இந்திய அரசுக்கு வலியுறுத்த சொல்கிறார் செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்  கு.செல்வப்பெருந்தகை அவர்கள் விடுக்கும் அறிக்கையில், காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சில மாதங்களுக்கு முன்பு சீன ராணுவத்தினர் அத்துமீறி நம் எல்லைக்குள் நுழைந்து நம்முடைய 20 இராணுவ வீரர்களை கொலை செய்தார்கள். …

அம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு, இலங்கை அரசு குத்தகைக்கு விட்டிற்பது தமிழகத்திற்கு ஆபத்தாகுமென இந்திய அரசுக்கு வலியுறுத்த சொல்கிறார் செல்வப் பெருந்தகை Read More

மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கவேண்டுமென்கிறார் கே.எஸ்.அழகிரி

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 12 ஆம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதைத் தமிழக அரசு ரத்துசெய்திருக்கிறது. ஆனால், நீட் தேர்வு நடத்துவதற்கு மத்திய அரசுமுயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, நீட்தேர்வினால் அரசுப் பள்ளிகளில் படிக்கிற பின்தங்கிய, ஒடுக்கப்பட்டசமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் மெட்ரிக்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிற அநீதிநடைபெற்று வருகிறது.  சமீபத்தில் வெளிவந்த புள்ளி விவரத்தின்படி கடந்த 15 ஆண்டுகளில்அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரமுடியாமல் கடும் சோதனைகளை சந்தித்து வந்துள்ளனர். கடந்த 2006 முதல் 2016 வரை அரசுப் பள்ளிகளில் படித்த 340 மாணவர்கள் மட்டுமேமருத்துவக் கல்லூரியில் சேருகிற வாய்ப்பை பெற்றுள்ளனர். இதில்விதிவிலக்காக 2007 ஆம் ஆண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் படித்த 62 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருகிற வாய்ப்பைப்பெற்றனர். ஆனால், 2013 ஆம் ஆண்டில் மிக மோசமாக வெறும் 18 மாணவர்கள்மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். நீண்டகாலமாக அரசுப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில்சேருகிற வாய்ப்பு, இத்தகைய அவலநிலையில் தான் உள்ளது. 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த700 மாணவர்களுக்கு நீட் மூலமாக தேர்வு பெற்றிருந்தாலும், இதில் 9 மாணவர்களுக்குத் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்கிடைத்தது. நீட் தேர்வின் காரணமாக அநீதி அதிகரித்ததே தவிரகுறையவில்லை.  இந்த அநீதியைப் போக்குவதற்குத் தான் தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர313 மாணவர்களுக்கும், பல் மருத்துவ படிப்பிற்கு 92 மாணவர்களுக்கும்கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. அதாவது, அரசுப் பள்ளியில் படித்த405 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்புகிடைத்தது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வை 8.41 லட்சம் பேர்எழுதினர். இதில் 3.44 லட்சம் பேர் (41 சதவிகிதத்தினர்) அரசுப் பள்ளிமாணவர்கள். தமிழகத்தில் உள்ள 25 மருத்துவக் கல்லூரிகளில்மொத்தம் 3,400 இடங்கள் உள்ளன. தமிழக அரசின் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு காரணமாக மொத்தமுள்ள 3,400 இடங்களில் அரசுப் பள்ளியில்படித்த 405 மாணவர்களுக்குத் தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீதமுள்ளமூவாயிரம் இடங்களில் சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் மெட்ரிக்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய அநீதியைப் போக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதேநேரத்தில் தமிழக அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தநடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.  எனவே, நீட் தேர்வினால் இழைக்கப்பட்டு வரும் அநீதியைப்போக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக முதலமைச்சர்தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தீவிரமாக எடுக்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறேன். நீட் தேர்விற்கு மாற்றாக எந்த அடிப்படையில்மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவது என்பதுகுறித்து வல்லுநர் குழுவை அமைத்து, அவர்களது பரிந்துரையை ஏற்றுதமிழகத்தில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிஇடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைஅமைந்திட, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குமுன்னுரிமை வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கவேண்டுமென்கிறார் கே.எஸ்.அழகிரி Read More