காங்கிரஸ் தலைவரை சந்தித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான்

இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்தார். 
மாநில நிர்வாகிகள் ஆ.கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, செந்தமிழ் அரசு,  விஜய் சேகர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ஜெ.டில்லிபாபு, எம்.பி.ரஞ்சன் குமார், நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத், பெரம்பூர் நிசார் மற்றும் பலர் உடனிருந்தனர்.