செண்பகவல்லி மீட்போம்” – ஆவணப்படம் வெளியீடு

தமிழ்நாட்டின் தாயக உரிமையை மறுத்துவரும் கேரளாவின் அடாவடியை முறியடிக்கும் வகையில், செண்பகவல்லி அணையை தமிழ்நாடு அரசே சீரமைக்க வேண்டும், வைப்பாறு நதியைப் பாதுகாக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, வரும் 2023 செப்டம்பர் 29ஆம் நாள்சாத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு …

செண்பகவல்லி மீட்போம்” – ஆவணப்படம் வெளியீடு Read More

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே – தமிழ் தேசிய பேரியக்கம் ஆர்பாட்டம்

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே! தடுப்பூசியால் பாதிக்கப்பட்டோர்க்கு இழப்பீடு வழங்கு!” என்ற முழக்கத்தோடு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு முன்னெடுத்த தடுப்பூசித் திணிப்புக்கெதிரான ஒன்றுகூடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு – கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கித் திணிக்கக் …

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே – தமிழ் தேசிய பேரியக்கம் ஆர்பாட்டம் Read More

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன்உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்- தமிழ் தேசிய பேரியக்கம்

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்துள்ளபுதிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய புதியமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த 03.08.2021 அன்று உச்ச நீதிமன்றம் அரியான மாநிலஅரசு – எதிர் – இராசுகுமார் என்ற வழக்கில் மிக முக்கியமானதீர்ப்பை வழங்கிருக்கிறது. “அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக்குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரைகட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்புகுறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போதுஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்றுஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏமந்த் குப்தா மற்றும்ஏ.எஸ்.கோபண்ணா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு உறுதிப்படகூறுகிறது. இதற்கு முன்னர் மாருராம் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்றவழக்கில் (1981, 1, SCC, 107) உச்ச நீதிமன்ற அரசமைப்புஆயம் “ஆளுநர் என்பவர் மாநில அரசின் சுருக்கெழுத்துவடிவம். அவர் மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். ஒரு மாநில அரசு தண்டனைக் குறைப்பு ஆணையை ஆளுநரின்ஒப்புதல் இல்லாமல் கூட நேரடியாக அறிவித்துவிடலாம்ஆயினும் பணி விதிகள் மற்றும் அரசமைப்புச் சட்ட இங்கிதம்காரணமாக அமைச்சரவையின் முடிவு ஆளுநரின் வழியாகசெயலுக்கு வரவேண்டிருக்கிறது” என்று அரசமைப்பு ஆயம்கூறியிருப்பதை தங்களது முடிவுக்கு அடிப்படையாகநீதிபதிகள் ஏமந்த் குப்தாவும், ஏ.எஸ். கோபண்ணதாவும்மேற்கோள் காட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசு – எதிர் – சிறிகரன் என்றமுருகன் எனும் ஏழு தமிழர் வழக்கில் (2016, 7, SCC, 1) உச்சநீதிமன்றம் இதே போன்று கூறியிருப்பதையும் மேற்கோள்காட்டிய நீதிபதிகள் ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குகட்டுப்பட்டு முன் விடுதலை வழங்குவது அவரது நீங்கா கடமைஎனத் தெளிவுப்படுத்துகிறார்கள். இந்த புதிய சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன்உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்துபுதிய பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாருராம் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்விடுதலை மற்றும் மன்னிப்பு வழங்கும் செயலில் உறுப்பு 72ன்படியான குடியரசுத் தலைவரின் அதிகாரமும் உறுப்பு 161ன்படியான ஆளுநரின் அதிகாரமும் ஒத்தவலு உள்ளவை, ஒரேநேரத்தில் செயல்பட கூடியவை என்று தெளிவுபடகூறியிருக்கின்றன. எனவே இச்சிக்கல் குறித்து தமிழ்நாடு அரசு குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதை ஒரு தடையாககருதாமல் புதிய பரிந்துரையை உருவாக்கி அதனைஆளுநருக்கு அனுப்பலாம். எந்த சட்டைத் தடையும் இல்லை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகஅமைச்சரவையை கூட்டி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழுதமிழர்களை விடுதலை செய்வதற்கு உரிய பரிந்துரையைஆளுநருக்கு உடனடியாக அனுப்பி ஏழு தமிழர் விடுதலைக்குவலுவாக முயலவேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம்சார்பில் கேட்டுகொள்கிறேன். 

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன்உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்- தமிழ் தேசிய பேரியக்கம் Read More

பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியதென்கிறார் பெ. மணியரசன்

சாட்டை” வலையொளி ஊடகவியலாளர் துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட 4 பேர் மீது பிணையில் வர …

பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியதென்கிறார் பெ. மணியரசன் Read More

சித்த மருத்துவத்திற்கு சிறப்பிடம் தர தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

சென்ற ஆண்டு பெரிதும் பரவிய கோவிட் – 19ம், அதைவிட இந்த ஆண்டு இரண்டாவது அலை பெருந்தொற்றும் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஓமியோபதி போன்ற மாற்று மருத்துவங்களின் முகாமையான தேவையை வலியுறுத்துகின்றன. தமிழ்நாடு அரசு ஓரளவு இதனை உணர்ந்திருந்தாலும் இத்திசையில் …

சித்த மருத்துவத்திற்கு சிறப்பிடம் தர தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை! Read More

ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன என்பதைப் பற்றி கூர்மையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், இராபட்பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்கள் …

ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! Read More