தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாதசுதந்திரப் போராட்ட வீரர்கள்நினைவு கூறப்பட்டனர்

இந்தியாவின் 75வது சுதந்திரத்தை கொண்டாடும்வகையில், ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாதநாயகர்கள்’ என்ற தலைப்பிலான இணையகருத்தரங்கை, மத்திய அரசின் தகவல் மற்றும்ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்சென்னையில் உள்ள மண்டல மக்கள் தொடர்பு துறைஅலுவலகம், பத்திரிகை தகவல் அலுவலகத்துடன்இணைந்து நடத்தியது.  சுதந்திர போராட்ட இயக்கத்தின் போற்றப்படாதநாயகர்களை வாழ்த்தி பேசிய, சென்னை கிறிஸ்த்துவகல்லூரியின், வரலாற்றுத்துறை உதவி போராசிரியர்டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின், சுப்பிரமணிய சிவா, டி.எம்.கலையண்ணன், யகுன் ஹாசன் சயீத் மற்றும்லட்சுமி சாகல் போன்ற தலைவர்கள் குறித்து பேசினார். சுத்த தமிழ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான, திருசுப்பிரமணிய சிவா, தனி தமிழ் இயக்கத்தைதோற்றுவித்து, அதை தனது மாத இதழ் ஞானபானு மூலம்பிரபலப்படுத்தினார்.  அவர் வஉசி மற்றும் பாரதிஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.  திலகரின்கொள்கைகளை பின்பற்றி, ஆங்கிலேயர்களைவன்மையாக எதிர்க்க இளைஞர்களை சுப்பிரமணிய சிவாஊக்குவித்தார். சென்னை சிறையில் முதல் அரசியல்கைதியாக இருந்த சுப்பிரமணிய சிவா, சிறையில் தோல்தொழிற் சாலையில் சுகாதாரமற்ற சூழ்நிலையில்பணியாற்றியதால், கடுமையான தொழுநோய்க்குஆளானார். இது பரவும் என பயந்து, சேலம் சிறைக்குவெறும் காலுடன் நடந்து செல்லும்படி சுப்பிரமணிய சிவாவற்புறுத்தப்பட்டார். இதனால் அவரது உடல்நிலைமேலும் மோசம் அடைந்தது. திரு கலையண்ணன் பற்றிபேசிய டாக்டர் மர்லின், காந்தியவாதியானகலையண்ணன், இந்திய தேசிய காங்கிரஸில் தனது 19ம்வயதில் இணைந்தார் என கூறினார். வெள்ளையனேவெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்ற அவர், கடந்த1949ம் ஆண்டு சட்டசபையில் இளம் உறுப்பினர் ஆனார். அவர் 3 முறை சட்டசபை உறுப்பினராக இருந்தார். சேலம் பகுதியில், அவர் சுமார் 1000 பள்ளிகளைதொடங்கினார் மற்றும் நலத்திட்ட பணிகளில் தீவிரமாகஈடுபட்டார்.  யகூப் ஹாசன் சயீத் பற்றி கூறுகையில், அவர் நாக்பூரில் பிறந்து சென்னைக்கு 1901ம் ஆண்டுவந்தார் என டாக்டர் மர்லின் கூறினார். முஸ்லிம் லீக்அமைப்பை ஏற்படுத்திய நிறுவனர்களில் அவரும் ஒருவர். தொழிலதிபரான இவர், இந்திய தேசிய காங்கிரஸில்1916ம் ஆண்டு இணைந்தார். பல முறை இவர் கைதுசெய்யப்பட்டார்.  இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து1923ம் ஆண்டு விலகிய யகூப் ஹாசன சயீத், சென்னைமாகாண முஸ்லீம் லீக் அமைப்பை ஏற்படுத்தினார். காங்கிரஸில் மீண்டும் இணைந்த அவர், ராஜாஜிதலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றார். ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம்ஆகியவற்றிலும் இங்கு பங்கெடுத்தார். திருமிகு லட்சுமிசாகல் பற்றிய பேசுகையில், அவர் கேப்டன் லட்சுமி எனஅறியப்பட்டார் என டாக்டர் மர்லின் கூறினார். மருத்துவரான லட்சுமி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால்தூண்டப்பட்டார். கடந்த 1940ம் ஆண்டு, அவர் சிங்கப்பூர்சென்று இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்துகேப்டன் ஆனார். சுபாஷ் சந்திர போசுடன் இணைந்துஅவர் ஜான்சி ராணி படைப்பிரிவை ஏற்படுத்தினார். பர்மாவிலிருந்து இந்திய தேசிய ராணுவம்பின்வாங்கியதும், அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப்பின் அவர் இந்தியா அனுப்பப்பட்டார்.  சுதந்திரத்துக்குப்பின் சமூக சேவைக்காக தனது வாழ்வைஅவர் அர்ப்பணித்தார். கடந்த 1971ம் ஆண்டு, வங்கதேசஅகதிகளுக்காக அவர் நிவாரண முகாம்களைநடத்தினார். போபால் விஷ வாயு தாக்குதல்சம்பவத்துக்குப்பின் அவர் மருத்துவக் குழுவுக்குதலைமை தாங்கி சென்றார் என டாக்டர் மர்லின்கூறினார்.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின், வரலாற்றுத்துறைஉதவிப் போராசிரியர் டாக்டர் சி. ஜெயவீரதேவன், பாளையக்காரர்கள் காலத்து இளம் நாயகர்கள், பலரதுபெயர் தென் தமிழகத்தில், இன்னும் பலருக்குவைக்கப்படுவது பற்றி கூறினார்.  செவல் பாளையத்தைசேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன், பூலித்தேவனுடன் இணைந்து கிழக்கு இந்தியகம்பெனிக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தார். பூலித்தேவன் இறந்த பிறகு, அவரது குழந்தைகளைபராமரித்த ஒண்டிவீரன் கட்டபொம்மன் மற்றும்ஊமத்துரையுடன் இணைந்து சுதந்திர இயக்கத்துக்காகபோராடினார். ஊமத்துரையுடன் கலந்து கொண்டபோரில் அவர் உயிரிழந்தார்.  சிவகங்கையில் ராணி வேலு நாச்சியாரின்நம்பிக்கைக்குரிய கமாண்டராக இருந்த குயிலிகுறித்தும், உதவிப் போராசிரியர்  சி. ஜெயவீரதேவன்விளக்கினார்.  வேலு நாச்சியாருடன் இணைந்து, ஆங்கிலேயருக்கு எதிராக அவர் எவ்வாறு போரிட்டார்என்பதை அவர் விளக்கினார். சுதந்திர இயக்கத்தின்முதல் மனித வெடிகுண்டாக அவர் செயல்பட்டு, ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்கை தகர்க்கஉடலில் தீ வைத்துக் கொண்டார். மற்றொருகுறிப்பிடத்தக்க வீரர், கருப்பு சேர்வை. இவர் தீரன்சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தலைவர். இவர் திப்புசுல்தானுடன் இணைந்து பயிற்சி பெற்றவர். கடந்த1805ம் ஆண்டு, இவர் தீரன் சின்னமலையுடன் சேர்த்துகைது செய்யப்பட்டார். பின் அவர் தூக்கிலிடப்பட்டார். ஈரோடு மாவட்டம், நலமங்கா பாளையத்தைச் சேர்ந்தபொல்லன் மாதாரி குறித்து பேசிய, டாக்டர்ஜெயவீரதேவன், தீரன் சின்னமலையுடன் இணைந்துஅவர் அனைத்து போரிலும் பங்கெடுத்தார். தீரன்சின்னமலையை பாதுகாப்பதில், அவர் சிறந்த ஒற்றனாகதிகழ்ந்தார். 1805ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், ஜெயராமபுரத்தில் சுட்டுகொல்லப்பட்டார்.  தலைமை உரையாற்றிய, சென்னை, மண்டல மக்கள்தொடர்பு இயக்குனர் ஜே.காமராஜ், இந்த பெருந்தொற்றுகாலத்தில், 9 கள விளம்பரத்துறை அலுவலகங்கள், பலதலைப்புகளில் பல நிகழ்ச்சிகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடத்துகின்றன என கூறினார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டுவிழாவைமுன்னிட்டு, போற்றப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்பற்றி, இந்த இணைய கருத்தரங்கம் நடத்தப்படுகிறதுஎன அவர் கூறினார். போற்றப்படாத வீரர்களைகவுரவித்து பிரபலப்படுத்தும் முயற்சியாக, சுதந்திரஇயக்கத்தைச் சேர்ந்த 140 தலைவர்களை மத்திய அரசுஅடையாளம் கண்டுள்ளது. அவர்களின் நினைவாக, நாடுமுழுவதும் முதல் கட்டமாக, 75 சிறப்பு நிகழ்ச்சிகள்  ஆகஸ்ட் கடைசி வாரத்தில், நடத்தப்படுகின்றன.  சென்னை மண்டல மக்கள் தொர்பு அலுவலகத்தின்களவிளம்பர அதிகாரி திருமிகு வித்யா ஏ.ஆர், வரவேற்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார். மாணவர்கள், போராசிரியர்கள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைஅமைச்சகத்தின் அதிகாரிகள் இந்த கருத்தரங்கில்பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு இ-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  படவிளக்கம்:  சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடநடத்தப்பட்ட  ‘சுதந்திர போராட்டத்தின் போற்றப்படாதநாயகர்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் முக்கியபேச்சாளர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் உதவிபேராசிரியர் டாக்டர் மரிலின் கிரேஸி அகஸ்ட்டின்.    சிறப்பு விருந்தினர் சேலம் பெரியார் பல்கலைக்கழகவரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் டாக்டர்சி.ஜெயவீரதேவன்.  தலைமை உரையாற்றும் சென்னை மண்டல மக்கள்தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு. ஜே.காமராஜ்.

தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அறியப்படாதசுதந்திரப் போராட்ட வீரர்கள்நினைவு கூறப்பட்டனர் Read More

தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி

கொரோனா பரவல் காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தாய்நாடு திரும்பிய தமிழர்களை தொழில் முனைவோர்களாக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து தாய்நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமாகத் தொழில் தொடங்கிட மானியத்துடன் …

தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடனுதவி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளா தாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் புத்த மதத்தினர் சீக்கியர்கள் பாரிசிக்கள் மற்றும் ஜெயினர் ஆகிய மதவழி சிறுபான்மையினர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகை யில் தனிநபர் தொழில் கடன் சுயஉதவிக் குழுக்களுக்கான …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடனுதவி Read More

மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணச் சலுகை அட்டையினை டிசம்பர் – 2020 வரையில் புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு.இ.ஆ.ப தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பார்வையற்றோர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக 2019-2020ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட பேருந்து பயண சலுகை அட்டையினை கோவிட்-19 முன்னெச்சாp க்கை நடவடிக்கைக்காக 2020 ஆகஸ்ட் வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி …

மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணச் சலுகை அட்டையினை டிசம்பர் – 2020 வரையில் புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு.இ.ஆ.ப தகவல். Read More

முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. தண்ணிர் திறந்து விட்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் முக்கொம்பு மேலணை அணைக்கட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட புள்ளம்பாடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணிர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 18.08.2020 அன்று முக்கொம்பு மேலணை வாத்தலையிலி …

முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. தண்ணிர் திறந்து விட்டார். Read More

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த சுகாதாரத் துறையை சார்ந்த 98 நபர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களை  மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப. 15.08.2020 அன்று வழங்கினார். திருச்சி ராப்பள்ளி மாவட்ட …

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் Read More

கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை திருச்சி ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு 18.07.2020 அன்று நேரில் பார்வையிட்டு …

கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை திருச்சி ஆட்சியர் நேரில் பார்வையிட்டார் Read More

தன்னந்தனியாக மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா

ஷேக்மைதீன் திருச்சி, ஜூலை, 10- தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், அதற்கான கண்காணிப்பு பணிகளை மோட்டார் சைக்கிள் சென்று ஆனி விஜயா ஐ.பி.எஸ். ஆய்வு நடத்தினார். திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து திருச்சி – …

தன்னந்தனியாக மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா Read More