தன்னந்தனியாக மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா

ஷேக்மைதீன்

திருச்சி, ஜூலை, 10- தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், அதற்கான கண்காணிப்பு பணிகளை மோட்டார் சைக்கிள் சென்று ஆனி விஜயா ஐ.பி.எஸ். ஆய்வு நடத்தினார். திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து திருச்சி – புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மாத்தூர் வரை மோட்டார் சைக்கிளில் சென்றார். எஸ்கார்ட், பாதுகாவலர்கள் என யாரையும் உடன் அழைத்துச் செல்லாமல் அவர் இந்த ஆய்வை தன்னந்தனியாக சென்று நடத்தினார்.

ஊரடங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும், உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் சுற்றிதிரிபவர்கள், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதேபோல் வார்த்தை பிரயோகங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என காவலர்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் புகார்கள், குறைகளை கேட்டறிந்தார்