செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு...ராகுல் நாத் ..., அவர்கள்தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் முன்னிலையில்உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மாண்புமிகு குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் இன்று (19.09.2023) பொதுமக்களிடம் 240 கோரிக்கை மனுக்களை பெற்றார்.

முஸ்லீம் சமுதாயத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர்உதவும் சங்கம் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான முதல் பருவத்தின்(ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) நன்கொடை தொகை ரூ.9,50,000/-க்கு இணையாக அரசிடமிருந்து இணைமானியம் தொகை 19,00,000/- பெறப்பட்டுள்ளது, இன்றைய நாளது தேதி வரை முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்வங்கி கணக்கில் மொத்தம் ரூ.31,63,652/- உள்ள தொகையில் ரூ.28,50,000/-னை மொத்தம் 298 பயணாளிகளுக்கு காசோலையாக வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவின்படி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறையின் சார்பாக  (19.09.2023) முதற்கட்டமாக 15 பயனாளிகளுக்கு சிறு தொழில்துவங்குவதற்கு மொத்தம் ரூ.1.47 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.பி.சுபா நந்தினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்திருமதி.இந்து பாலா, மகளிர் திட்ட இயக்குநர் திரு.மணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர்திருமதி.சாகிதா பர்வின், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ஆர்.டி.அரசு, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.உதயா கருணாகரன், திருப்போரூர் முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் திரு.மூர்த்தி, திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் திரு.எஸ்.ஆர்.எல்.இதயவர்மன்செங்கல்பட்டு நகர்மன்றத் தலைவர் திருமதி. தேன்மொழி நரேந்திரன், இலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் திருமதி.சுப்புலட்சுமி பாபு, நந்திவரம்கூடுவாஞ்சேரி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.கார்த்திக்தண்டபாணி, மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஜெ.சண்முகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுஅலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.