பாலஸ்தீனத்தின் மீது பயங்கரவாத தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலைக் கண்டித்து தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தின் மீது பயங்கரவாத தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலைக் கண்டித்து சென்னைதங்கசாலை மணிக்கூண்டு அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1947க்கு முன்பாக ஒற்றை தேசமாக இருந்த பாலஸ்தீனத்தைத் துண்டாடி அபகரித்த இஸ்ரேல், மிச்சமீதியிருக்கும் பாலஸ்தீனத்தையும் முழுவதுமாக …

பாலஸ்தீனத்தின் மீது பயங்கரவாத தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் இஸ்ரேலைக் கண்டித்து தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் Read More

எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் – கைது

தமிழர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்ற இனப்பகை நோக்குடன், சட்ட விரோதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து – கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் இன்று (13.07.2021) – காவிரி உரிமை …

எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் – கைது Read More

மூடியது மூடியதாகவே இருக்கட்டும்! மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது! மகளிர் ஆயம் தலைவர் ம. இலெட்சுமி வலியுறுத்தல்

கொரோனா பெருந்தொற்றின் இராண்டாவது அலை மக்களைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டுள்ள இச்சூழலில், தி.மு.க. அரசு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 15.06.2021 முதல் திறக்கப்போவதாக அறிவித்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது. பெருந்தொற்று பரவிவிடக் கூடும் என தேநீர் கடைகளைக் கூடத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள …

மூடியது மூடியதாகவே இருக்கட்டும்! மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது! மகளிர் ஆயம் தலைவர் ம. இலெட்சுமி வலியுறுத்தல் Read More

மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முன்னேற்றக் கழகம் போராட்டம் அறுவிப்பு

கொரானாவின்கோரத்தாண்டவத்தால் பல இன்னுயிர்களைகடைநிலை குடிமகன் முதல் பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், நீதித்துறை உள்ளிட்ட ஏனையபிற அரசுத்துறைகளைச்சேர்ந்த உயர் அதிகாரிகள் வரைக்கும் உயிர்பலி ஏற்பட்டு நிறைய பேர்சொல்லொண்ணா துயரத்திலும், துக்கத்திலும், மிகுந்த மன மற்றும் பண கஷ்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். டீக்கடை கூட திறக்காத இந்த சூழ்நிலையில்  டாஸ்மாக் கடை திறப்பு என்ற அறிவிப்பு என்பது கடைநிலை குடிமகனின் குடும்பம்முதல் காவல்துறையினரின் குடும்பம் வரை  அனைத்து சமூக மக்களும் பல்வேறு தேவையில்லா அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்படும் அபாய சூழ்நிலைய உருவாக்கியுள்ளது. டாஸ்மாக்கின் போதையா? (இல்லை) கோயில்களின் கீதையா? என்ற தலைப்பில் மொட்டை போட்டு மற்றும் பட்டை அடித்து கையில் நீதிதேவதையின் தராசை ஏந்தி திமுக அரசிடம் நியாயம் கேட்டு  டாஸ்மாக் கடை திறப்பு அறிவிப்பை உடனே திரும்பிப் பெற வேண்டும் அல்லது வருகிற14.06.2021 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட/பிராத்தனை செய்வதற்கும் அனுமதி வழங்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எங்களின் இந்த நூதன போராட்டம் தமிழகம் முழுவதும் வருகிற 15.06.2021 அன்று நடத்துகிறோம். சென்னையில் எனது தலைமையில்  அருள்மிகு  பார்த்தசாரதி திருக்கோயில் குளம்அருகே, திருவல்லிக்கேணியில் நடைபெறஉள்ளது. இந்த நூதன அறப்போராட்டமானது 144 தடைஉத்தரவிற்கு உட்பட்டு, மத்திய மாநில அரசுகளின் கோரான வழிமுறைகளை பின்பற்றியும், சமூகஇடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர். எஸ் கே சுவாமி வழக்கறிஞர் மற்றும் தலைவர் தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் 

மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முன்னேற்றக் கழகம் போராட்டம் அறுவிப்பு Read More