‘குரங்கு பெடல்’ திரைப்பட விமர்சனம்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ள ‘குரங்கு பெடல்’ . கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரதான நாயகனாக  காளி வெங்கட், நடித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள மண் வாசனை மணக்கும் ஒரு குக்கிராமத்தில் காளிவெங்கட் தன் குடும்பத்தினருடன்  வாழ்ந்து வருகிறார். காளிவெங்கட்டுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாததால் அவரை நடராஜா சர்வீஸ் என்று கேலி செய்கிறார்கள். இதற்காகவே அவரது மகன்  மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்ட கற்றுக்  கொள்கிறான். வாடகை காசு இல்லாததால் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறான். மகனை தேடி காளிவெங்கட்டும் பாடலை சைக்கிள் கடைகாரரும் தேடி அலைகிறார்கள். இதுதான் கதை. திரைக்கதை ஓட்டத்தை நகைச்சுவையோடு கலந்து தந்திருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன். திரையரங்கு முழுவதும் கிராமத்து மண் வாசனை வீசுகிறது*******