நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு ’டிஎன்ஏ’ படத்தின் பதாகை வெளியிடப்பட்டது

ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார்.  நிமிஷா சஜயன், கதாநாயகியாக நடிக்கிறார். அதர்வா முரளியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், படத்தின் பதாகையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  பதாகையில் அதர்வா  முரளியின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.***********


இயக்குநர் நெல்சன் தனது வெவ்வேறு ஜானர்களைத் தனது முந்தையப் படங்களில் முயற்சி செய்து வெற்றியும் கண்டவர். இவருடன் ‘டிஎன்ஏ’ படத்தில் திறமையான நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் டிரைலர், ஆடியோ மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.