ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில், சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில், இனிகோ பிரபாகர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் இனிகோ பிரபாகர், அஞ்சு கிருஷ்ணா அசோக், ‘பிக் பாஸ்’ சத்யா, சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி, ராஜன், உதயராஜ், ‘அருவி’ பாலா, யாசர், பிரதிக்ஷா, பசுபதி ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரணவ் சூரஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை எஸ்.என். ஃபாசில் கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரித்திருக்கிறார். எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் குகன் இப்படத்தை வழங்குகிறார்.********
எதிர்வரும் நவம்பர் 27ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், மணிகண்டன் மற்றும் ‘எகெய்ன் ஃபிலிம் மேக்கர்ஸ்’ அரவிந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் எஸ்.ஆர். பிரபாகரன் ஆகியோர் இணைந்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

