விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் பதாகை

மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீராகணம்..’ எனும் முதல் பாடலும், அதற்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கின்றன. மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம்.சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் ஜே.பி.இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். வி கவனிக்க, கலை இயக்கத்தை சி.கே.முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார்.*******

உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் – (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார். அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP – Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சரியா.. சதியா.. நீ என் சகி.. மதியா.. விதியா.. நீ கண்மணி.. இறையா.. இரையா.. இதயம் நீயா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடலைப் இப்படத்தின் இயக்குநர் மித்துன் மாணிக்கம் எழுத, பின்னணிப் பாடகர் ஆதித்யா RK, பின்னணிப் பாடகிகள் மால்வி சுந்தரேசன் மற்றும் அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். காதல் பாடலாகவும் மெலோடியாகவும் உருவாகியிருக்கும் இந்தப் பாடல், இசை ரசிகர்களைக் கடந்து இளைய தலைமுறையினரையும் வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.