தற்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை  கடவுள் ஒருவாரால்தான் தடுத்து நிறுத்த முடியும்  – லியோ பால் கொலம்பஸ் லாறி

தற்போது நீண்டகாலமாக  நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை  கடவுள் ஒருவரால்தான் தடுத்து நிறுத்தமுடியும் என்று மனுஜோதி ஆஸ்மரத்தின் நிர்வாகி லியோ பால் கொலம்பஸ் லாறி கூறியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றியபோது இக்கருத்தை தெரிவத்தார். பணம் சம்பாதிக்க மனிதன்  கடவுளைவிட்டு வெகு தூரம் சென்றுவிட்டான் என்று கூறிய லியோ, போட்டி பொறாமை ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுத்து அடித்துக்கொள்வது என்று சென்று கொண்டிருக்கிறான். இதனால் கடவுளின் கோபாத்துக்கு ஆளாகிவிடுகிறான்  என்றும் கூறினார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், கடல் கொந்தளிப்பு, வெள்ளப்பெருக்கு, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் சீற்றத்தை இறைவன் ஏற்படுத்தி மனிதனுக்கு தண்டனைகளை கொடுத்து வருகிறான். கடவுளின் கோபத்திலிருந்து தப்பித்தாலோழிய மனிதன் வாழமுடியாது. மனிதன் தன்னிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டால் இறைவன் மன்னித்தும் விடுவான். இறைவனது மன்னிப்பை பெற கடவுளுக்கு கீழ்படிந்து மதங்களுக்கு அப்பாற்பட்டு  ஒரே கடவுளுக்கு கீழ் நாம் அனைவரும் ஒன்றுகூடி வாழ்ந்தோமானால் அவனது கோபத்திலிருந்து  தப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார். இக்கருத்தை இளம் தலைமுறையினருக்கு சொல்வது  மனுஜோதி ஆசிரமத்தின் முக்கிய கடமையாக கருதுவதால். இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு நேரில் சென்று “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற எங்களது கொள்கையை பரப்பிக்கொண்டிருப்பதகாகவும் லியோ பால் கொலம்பஸ் லாறி தெரிவித்தார்.

அதைக்கேட்டு இறைவனுக்கு கீழ்படிந்து நடப்பவர்கள் அநேகம்பேர் இருக்கிறார்கள் என்றாலும், இன்னும்  அநேக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காவே ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருப்பபதாக தெரிவித்தார். யுத்தத்தை மனிதர்களால் தடுத்து நிறுத்த முடியும் என்று சொல்கிறார்கள். கடவுள் நினைத்தால் மட்டுமே யுத்தத்தை நிறுத்த முடியும். பெறும் பேரழிவுகளிலிருந்தும் இயற்கச் சீற்றத்திலிருந்தும்  மனிதர்களை காப்பாற்ற கடவுள் ஒருவரால்  மட்டுமே முடியும். மனிதர்களில் ஒருவருக்கொருவர் அன்போடு நடந்து கொண்டால்தான் ஒரு நிம்மதியான வாழ்க்கையை கடவுளிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியும் என்று கூறினார்.