சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் நவ.27ல் வெளியீடு

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘’சிட்டுக்குறிஞ்சி’. ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில், இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஹங்கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவினரும் பங்களித்துள்ளனர். கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.*******

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம், தயாரிப்பாளர்  டி. ஜூட் ஆனந்த், நடிகர்கள் ரஜித் சிஆர், ஆதவன், ஜி.எம். குமார், நக்ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக், வெங்கடேஷ், வி.ஜே. பப்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆர்.வி. உதயகுமார் கலந்துகொண்டார்.