திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடனுதவி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளா தாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் புத்த மதத்தினர் சீக்கியர்கள் பாரிசிக்கள் மற்றும் ஜெயினர் ஆகிய மதவழி சிறுபான்மையினர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகை யில் தனிநபர் தொழில் கடன் சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுகடன் ஆகிய கடன்கள் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி மரபுவழி கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விராசத் மரபு உரிமை என்ற கடன் திட்டத்தை தேசிய சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு கைவினை கலைஞர் களுக்காக குறைந்த வட்டி வீதத்தில் அவர்களின் தொழிலுக்கு தேவையான முதலீட்டுக்காக உபகரணங்கள் கருவிகள் இயந்திரங்கள் ஆகியவற்றை வாங்கும் பொருட்டு கடனுதவி வழங்கு கிறது. இத்திட்டத்தில் ஆண்டு வருமானம் கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98000 க்கு மிகாமலும் நகர் புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.120000 மிகாமலும் இருக்க வேண்டும். கடனு தவி தொகை அதிகபட்சம் ரூ.1000000 வரை ஐந்து வருட தவணை திட்டத்தில் ஆண்களுக்கு 5 சதவிகிதம் வட்டி வீதத்திலும் பெண்களுக்கு 4 சதவிகிதம் வட்டி வீதத்திலும் கடனுதவி வழங்க ப்படும். குறிப்பாக கைத்தறி மற்றும் வினைப் பொருட்கள் தயாரிக்கும் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு 90 சதவிகிதம் மாநில கடனளிக்கும் முகமையின் பங்கு 5 சதவிகிதம் பயனாளியின் பங்கு 5 சதவிகிதம் ஆகும். இத்திட்டத்தில் பயன்பெற சாதிச்சான்று வருமானச்சான்று குடும்ப அட்டை ஆதார் அட்டை நகல் வங்கி கோரும் இதர ஆவணங்கள் அளிக்க வேண்டும். கடன் பெற விரும்பும் கைவினை கலைஞர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் திருச்சிராப்பள்ளி அனைத்து நகர கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் நேரில் பெற்று விண்ணப் பித்து பயனடையலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தெரிவித் துள்ளார்.