பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50காசுகளில் இருந்து ரூ.850.50 காசுகளாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதிமந்திரியுமான ப. சிதம்பரம், கடந்த நவம்பர், 2020 முதல் ஜூலை, 2021 விலை ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு ‘மோடியால் சாத்தியம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பதிவில், மோடியின் அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் -2020 முதல் 2021 வரை:
நவம்பர் 30, 2020: ₹594
டிசம்பர் 1, 2020: ₹644
ஜனவரி 1, 2021: ₹694
பிப்ரவரி 4, 2021: ₹719
பிப்ரவரி 15, 2021: ₹769
மார்ச் 1, 2021: ₹819
ஜூலை 1, 2021: ₹834 எனப் பதிவிட்டுள்ளார்.