கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு பள்ளிகள்செயல்படாமல், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உட்பட அனைவரும்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்காலகனவுடன் உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களின்முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், மத்திய அரசு கொரோனா 3 – வது அலை குறித்தமுன்னெச்சரிக்கை இன்றி, மாணவர்களின் பின்புலத்தில் நிலவும்ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள் பற்றிய கவலையின்றி, செப்டம்பர் 12 – ந்தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பதுமருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மாணவர்களைஅதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. சமத்துவமற்ற கல்வி, சரிசமமற்ற பாடத்திட்டம், சீரற்ற கல்விகட்டமைப்பு என்றிருக்கும்போது, மாநில பாடத்திட்டங்களில்பயிலும் மாணவர்களுக்கு மத்திய பாடத்திட்டத்தின் கீழ் ஒரேவகையான தேர்வு நடத்தும் இத்தகைய போட்டி நிலை உலகில்எந்த நாடுகளிலும் கிடையாது. பல்வேறு மொழிகள், மரபுகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் கொண்ட பல மாநிலங்களைஒருங்கிணைத்து கூட்டாட்சியாக இந்திய ஆட்சிநடைபெறுகிறது. ஆனால், மாநில அதிகாரத்திற்குட்பட்டகல்விதுறையில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முனைவதுமுற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கிடையே நிலவும் சமூக, பொருளாதார வேறுபாடுகளை களையாமல், சமத்துவத்தைஉருவாக்காமல், எளிய மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும்தடுப்பாக நீட் அமைந்துள்ளது. தேர்வில் அதிக மதிப்பெண் பெற, வசதியுள்ள மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில்லட்சக்கணக்கில் செலவு செய்து பயில்வார்கள். வசதியற்றமாணவர்களுக்கு தனியார் பயிற்சி சாத்தியமற்றது.