காமெடி நடிகர் டிஎஸ்கேவுக்கு தானே விளம்பரம் செய்த தமன்னா!

சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் நகைச்சுவைப் படமாக வெளியான ‘பெட்ரோ மாக்ஸ்’ படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது. திருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே இப்படி ஒரு வெளிச்சத்தை பெறு வதற்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகி யிருக்கிறது. பெட் ரோமாக்ஸைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘தனுசு ராசி நேயர்களே’ என்கிற படத்தில் முழுநீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித் திருக்கிறார். இதுகுறித்து டி.கே.எஸ். கூறும்போது, காரைக்குடியில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தேவதையாக தமன்னா வந்து இறங்கினார். பெரிய நடிகை என்கிற பந்தா எதுவும் இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாக பழகினார்.. படப்பிடிப்பில் சூர்யா, விக்ரம், பாகுபலி காளகேயன் போல நான் மிமிக்ரி செய்து நடிக்கும் நகைச் சுவை காட்சிகள் மிமிக்கிரி வசனங்களை பார்த்துவிட்டு இயக்குநரிடம் யார் இந்த பையன் என்று விசாரித்துள்ளார் தமன்னா. குறைந்த நாட்கள் தான் அவர் படப் பிடிப்பில் எங்களுடன் கலந்துகொண்டாலும் எந்த த்றபெருமையும் இல்லாமல் பழகினார். அதுமட்டுமல்ல பெட்ரோமாக்ஸ் பட வெளியீடு நேரத்தில் தமன்னா கலந்து கொண்ட ஒவ்வொரு பேட்டியிலும் படம் குறித்து கூறும்போது, தவறாமல் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு பாராட்டியபோதுதான் என்னுடைய நடிப்பால் அவர் மனதில் நானும் ஒரு இடம் பிடித்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியவந்தது.. இதைவிட பெரிய பாராட்டும் மகிழ்ச்சியும் ஒரு கலைஞனுக்கு என்ன இருக்க முடியும்? என்றார் டிஎஸ்கே..