கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மாடக்கொட்டான் ஊராட்சி மாயபுரம் கிராமத்தில் 14.10.2019 அன்று கால்நடைப் பராமரிப்புத் துறை யின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப.,  கால் நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் முகாமினைத் துவக்கி வைத் தார். கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய் கோமாரி நோயானது, கால் நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு கால்நடை வளர்ப்போருக்கு பொருளா தாரம் மற்றும் உற்பத்தி இழப்பையும் ஏற்படுத்துகிறது. இந்நோயினால் கறவை மாடுகளின் பால் உற்பத்திக் குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளின் சினைப் பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்ற பாதிப்பு கள் ஏற்படுகின்றன. அதன்படி, கால்நடைப் பராமரிப்புத் துறையின் மூலம் கால் நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய்களைத் தடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை வீதம் இரண்டு சுற்றுகளாக கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 14.10.2019 அன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாடக்கொட்டான் ஊராட்சி,மாயபுரம் கிராமத் தில் இன்றைய தினம் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பாக கோமாரி தடுப்பு ஊசி முகாமினை துவக்கி வைத்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் மூலம் இதுவரை 16 சுற்றுகோமாரி தடுப்பு ஊசி முகாம்கள் நடத்தப் பட்டுள்ளன. துவக்கி வைக்கப்பட்டுள்ள 17-ஆவதுசுற்று தடுப்பு ஊசி முகாமா னது 14.10.2019 அன்று முதல் 03.11.2019 வரையிலான நாட்களில் நடத்திட திட்டமி டப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்தம் 86,945 கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி போடப்படவுள்ளது. இப்பணிகளுக்காக மாவட் டத்தில் மொத்தம் 50 கால்நடை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழு விலும் ஒரு கால்நடை மருத்துவர் உதவி மருத்துவர் கால்நடை ஆய்வாளர் கால் நடை உதவியாளர் ஒருங்கிணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக் கும் நேரடியாகச் சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.சுப்பையா பாண்டியன், உதவி இயக்குநர் மரு.ஆர்.இராதாகிருஷ்ணன், கால் நடை அறுவை சிகிச்சை நிபுணர் மரு.பி.செங்குட்டுவன், இராமநாதபுரம் வட்டாட் சியர் திருமதி தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பாண்டி உள்பட அரசு அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள், உரிமையாளர்கள் பங்கேற்றனர்.