கொரோனா வைரஸ் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி – கொ.வீரராகவராவ் தகவல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சுகாதார மையங்கள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் மூலம் யோகா பயிற்சி வழங்கப் படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் இதுவரை 1849 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 760 நபர்கள் பு+ரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்காக சுகாதார மையம் மற்றும் பராமாpப்பு மையம் என இரண்டு விதமாக சிகிச்சை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் 1055 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் தடுத்திடும் விதமாக மருத்துவர்கள் மூலம் எளிய முறையிலான யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சிகிச்சை பெறும் சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய நேரத்தில் தரமான முறையில் போதிய உணவு குடிநீர் மற்றும் சத்தான பழங்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதா என்பதை கண்காணிப்பதற்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இம்முகாம்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி பாpசோதனை செய்யப்பட்டு மல்டி வைட்டமின் மற்றும் சிங்க் சல்பேட் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இப்பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு அரசு மேற் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். குறிப்பாக தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தொpவித்துள்ளார்.