சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த 49 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

1.பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், தாம்பரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 7 வெளிமாநில குற்றவாளிகள் கைது. சென்னை, நங்கநல்லூர், 2வது குறுக்கு தெரு விரிவு, எஸ்.பி.ஐ காலனி, என்ற முகவரியில் திருமதி.கோமளவள்ளி, வ/48, க/பெ.ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20.09.2019 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 120 சவரன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை யாரோ திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து கோமள வள்ளி S-9 பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை ய்யப்பட்டது. மேற்படி வழக்கில் தொடர்புடைய குற்ற வாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் புனித தோமை யர் மலை துணை ஆணையாளர் திரு.பிரபாகர் தலைமை யில் தாம்பரம் சரக உதவி ஆணையாளர் திரு.அசோகன், புனித தோமையர் மலை உதவி ஆணையாளர் திரு.சங்கரநாராயணன்,S-11 தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஆல்பின்ராஜ், S -9 பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவக்குமார், மாம்பலம் குற்றப் பிரிவு ஆய்வாளர் திரு.ஆதவன்பாலாஜி உதவி ஆய்வாளர்கள் திரு.கண்ணன், (S-10 பள்ளிக்கரணை காவல் நிலையம்) திரு.கஜபதி (காவல் கட்டுப்பாட்டு அறை) திரு. சேகர், (S-11 தாம்பரம் காவல் நிலையம்) திரு.ராஜேந்திரன், (S-10 பள்ளிக்கரணை காவல் நிலையம்) திரு.ரங்கநாதன் (S- 10 பள்ளிக்கரணை காவல் நிலையம்) திரு. ராஜி (S-14 பீர்க்கன்கரணை காவல் நிலையம்) திரு.சுரேஷ் (S-9 பழவந்தாங்கல் காவல் நிலையம்) திருமதி.லெட்சுமி (S-4 நந்தம்பாக்கம் காவல் நிலையம்) சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பன்னீர் செல்வம், (S-4 நந்தம்பாக்கம் காவல் நிலையம்) தலைமைக்காவலர்கள் திரு.மகேஷ்வரன், (த.கா.36193, S-1 புனித தோமையர்மலை காவல் நிலையம்) திரு.அல்போன்ஸ்வரீத், (த.கா.35970, S-4 நந்தம்பாக்கம் காவல் நிலையம்) திரு.செந்தில் (த.கா.35308, S-9 பழவந்தாங்கல் காவல் நிலையம்) திரு. பாலாஜி (த.கா.35230, S-9 பழவந்தாங்கல் காவல் நிலையம்) திரு.வெற்றிவேலன், (த.கா.35314, S-4 நந்தம்பாக்கம் காவல் நிலையம்) திரு.தினகரன், (த.கா.32293, S-4 நந்தம்பாக்கம் காவல் நிலையம்) திரு. பாஸ்கர், (த.கா.43387, S-13 குரோம்பேட்டை காவல் நிலையம்) திரு.ராஜேஷ், (த.கா. 36064, S-7 மடிப்பாக்கம் காவல் நிலையம்) திரு.தண்டபாணி, (த.கா.35136, S-13 குரோம்பேட்டை காவல் நிலையம்) முதல் நிலை காவலர்கள் திரு.மதன் (மு.நி.கா .33095, S-13 குரோம்பேட்டை காவல் நிலையம்), திரு.கோபால் (மு.நி.கா.33095, S-13 குரோம்பேட்டை காவல் நிலையம்), திரு. சேவியர் பிரான்சிஸ், (மு.நி.கா.32770, S-11 தாம்பரம் காவல் நிலையம்) திரு. கலைச்செல்வன் (மு.நி.கா.48558, S-7 மடிப்பாக்கம் காவல் நிலையம்) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பல்வேறு கோணங் களில் தீவிர விசாரணை செய்து வந்தனர். மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் மேற்படி திருட்டு வழக்கில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் மேற்படி வழக்கில் சம் பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் சென்னையிலிருந்து இரயில் மூலம் இராஜஸ்தான் தப்பிச் சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் வழியில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களில் உள்ள காவல் நிலை யங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள நக்டா இரயில் நிலையத்தில் மேற்படி குற்றவாளிகள் அனைவரையும் அங்குள்ள போலீசார் மடக்கி பிடித்து சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித் தனர். தனிப்படை போலீசார் மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட குற்ற வாளிகளை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தனிப்படை போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1) ராஜு கூரு (19), த/பெ.சீத்தாராம், ராஜஸ்தான், 2) பாக்சந்த் பகரியா (21), த/பெ. ராம் பிரசாத் பகரியா, ராஜஸ்தான், 3) ராம் துஸ்யா (18), த/பெ. சவுன்லால், ராஜஸ்தான், 4) ராம் நிவாஸ் ஜங்கிலி பகரியா (21), த/பெ. ராய்மல், 5) ரஞ்சித், வ/16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 6) கைலாஸ் பகரியா (18), த/பெ.சித்தார், 7) கலுராம் பகரியா (20), த/பெ. பத்ரி பகரியா, ராஜஸ்தான் என்பது தெரிய வந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் மேற்படி நபர்கள் தாம்பரம் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியுள்ளதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 120 சவரன் தங்க நகைகள், வைர நெக்லஸ், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

2.எழும்பூர் பகுதியில் பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது. விசாரணையில் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளது அம்பலம். சென்னை, எழும்பூர் பகுதியில் வசித்து வந்த கவிதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்ற பெண் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள Kavins Management Solution என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள் ளார். கடந்த 30.06.2019 அன்று வேலைக்கு சென்ற கவிதா வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் எப்-2 எழும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் Woman Missing பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற் கட்ட விசாரணையில் கவிதா வேலை செய்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி என்பர் மேற்படி பெண்ணை கடத்தி சென்றது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் கடத்தல் வழக்காக பிரிவு மாற்றம் செய்து விசாரணை செய்தனர். இந்நிலையில் காணாமல் போன பெண்ணின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். மேற்படிவழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சேட்டு தலைமையில், உதவி ஆய்வாளர்கள் திரு.ஐயப்பன், திரு.மோகன், மற்றும் தலைமைக்காவலர்கள் திரு.சத்தியநாராயணன் (தா.கா.27367) திரு.ராமையா (தா.கா.27178) முதல் நிலைக்காவலர் திரு.பாலசுப்பிரமணியன் (மு.நி.கா.33164) அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. காணாமல் போன பெண் திருப்பூரில் இருப்பதாக கிடைத்த ரகசிய தவலின் பேரில் தனிப்படை போலீசார் திருப்பூர், நொச்சி பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி காணமால் போன பெண்ணை மீட்டு உயர் நீதிமன்றத்தில் 09.09.2019 அன்று ஆஜர்படுத்தப்பட்டு நீதி மன்ற உத்தரவுப்படி, அவரது பெற்றோரிடம் அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் கவிதா கொடுத்த தகவலின் பேரில், அவரை கடத்திய தனியார் நிறுவன மேலாளர் ராஜேஷ்பிரித்வியை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 15.09.2019 காலை ராஜேஷ் பிரித்வி, கவிதா வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு தகராறு செய்து கவிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தகவலறிந்த தனிப்படை போலீசார்சம்பவயிடத்திற்கு சென்று ராஜேஷ் பிரித்வி, வ/29, த/பெ.ராமச்சந்திரன், எண்.141, ஏ.பி நகர், மேற்கு வீரபாண்டி விரிவு, நொச்சிப்பாளையம், திருப்பூர் என்ப வரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் குற்றவாளி ராஜேஷ்பிரித்வி போலியான நிறுவனத்தை நடத்தி
மருத்துவசீட்டு வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூ லித்து ஏமாற்றியுள்ளதும், தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்த பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், தன்னை காவல் உதவி ஆய்வாளர் என்று அறிமுகப்படுத்தி பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. மேலும் இவர் தன்னுடைய பெயரை தினேஷ் (எ) ஶ்ரீராமகுரு (எ) தீனதயாளன் (எ) ராஜேஷ் பிரித்வி என்று மாற்றி 6 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளதும் தெரிய வந்தது. இவர் மீது திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி ஆகிய காவல் நிலையங்களில் பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையிலுள்ளதும் தெரியவந்தது. மேலும் அவருடைய அலுவலகத்தில் இருந்து உதவி ஆய்வாளர் சீருடை, உதவி ஆய்வாளர் அடையாள அட்டை, போலியான ஆதார் அட்டை, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கைவிலங்கு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

3.ராயப்பேட்டை பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கொண்டு சென்ற பெண் உட்பட 8 பேர் கைது . 40 கிலோ கஞ்சா, ரூ.6,140/- மற்றும் 1 ஆட்டோ பறிமுதல். D-2 அண்ணா சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.மூவேந்தன், திரு.வினோத்குமார், திரு.கிருஷ்ணன், திரு.கோபிநாத், தலைமைக்காவலர் திரு.ஆனந்தராஜ் (த.கா .எண்.27581) பெண் தலைமைக்காவலர் திருமதி.சுஜாதா (த.கா.25453) ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த கடந்த 13.09.2019 அன்று கண்காணிப்பு பணியிலிருந்த போது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் ராயப்பேட்டை, பீட்டர்ஸ்சாலை, தபால் அலுவலகம் அருகில் கண் காணித்த போது அவ்வழியே சந்தேகம்படும்படி வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்து, சோதனை செய்த போது, அதில் பெருமளவு கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன்பேரில் மேற்படி ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 1.பாண்டி யன், வ/57, த/பெ.மோலியத்தேவர், மேலக்கூடலூர், தேனிமாவட்டம் 2.சிங்கராஜ், வ/32, த/பெ.கரந்தமலை, மேலூர், மதுரை மாவட்டம் 3.அமுல்தாஸ் (எ) சுப்பிரமணி, வ/44,த/பெ.ஏகாம்பரம், கிரியப்பா சாலை, தேனாம்பேட்டை இவரது மகன் 4.சூர்யா (எ) சூர்யபிரகாஷ், வ/21, த/பெ.அமுல்தாஸ், 5.பிரியலெட்சுமி, வ/22, த/பெ. இந்திரஜித், நெல்லூர், 6.செல்வம்,வ/56, த/பெ.சாத்தையா, திடீர்நகர், மதுர வாயல்7.துரை, வ/65, த/பெ.கனகராஜ், பி.கே.காலனி, புளியந்தோப்பு 8.வரதராஜன், வ/55, த/பெ.வீராசாமி, நடுக்குப்பம், மதுரவாயல் ஆகிய 8 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 கிலோ எடை கொண்ட கஞ்சா, பணம் 6,140/- மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 8 நபர்களும் நீதிமன்ற த்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘4.திருவல்லிக்கேணி பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகள் கைது. சென்னை, திருவல்லிக்கேணி, கெனால் தெரு, எண்.1/1 என்ற முகவரியில் ஹரி (எ)அறிவழகன் வ/24, த/பெ.சரவணன் என்பவர் வசித்து வந்தார். கடந்த 19.09.2019 அன்று இரவு மேற்படி ஹரி (எ) அறிவழகன் வீட்டிலிருந்த போது அங்கு வந்த 3 நபர்கள் மேற்படி ஹரி (எ) அறிவழகனை கத்தியால் சரமரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த காயமடைந்த ஹரி (எ) அறிவழகன் சம்பவயிடத்திலே இறந்து விட்டார். இது குறித்து ஹரி (எ) அறிவழகனின் தாய் லட்சுமி டி-6 அண்ணசதுக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரண செய்யப்பட்டது. மேற்படி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய எழும்பூர் சரக உதவி ஆணையாளர் திரு. சுப்பிரமணி , டி-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.வெங்கட் குமார், டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் திரு.மோகன் தாஸ், டி- 2அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் திரு.அருணாச்சலராஜா டி-6 அண்ணா சதுக்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பிரசித்தீபா, டி-1 திரு வல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மருது, டி-1 திருவல்லிக் கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கவியரசு, காவலர் ரவிபிரகாஷ் ,(38408) ஆயுதப்படை காவலர் திரு.மதன் (41712) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1.வினோத், வ/29, த/பெ.பாலு, எண்.33/34, வி.ஆர்.பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி 2.பாலாஜி, வ/27, த/பெ.பாலு, எண்.33/34, வி.ஆர்.பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி 3.சத்யா, வ/29, த/பெ.குப்புசாமி எண்.43, ராம்நகர், 8வதுதெரு, ஐஸ்அவுஸ் ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட வினோத் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் மீது கொலைவழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த மேற்படி 49 காவல் ஆளிநர்கள் மற்றும் வெளிமாநில குற்றவாளிகளை பிடிக்க உதவிய செல்போன் Service Provider Nodal Officers திரு.டேவிட் ஜோசப் பால்ராஜ், (ஏர்டெல்), திரு.சந்திரமௌலி மோகன்ராம், (ரிலையன்ஸ்ஜியோ) திரு.முரளிகிருஷ்ணன் (வோடபோன்) ஆகியோரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 27.9.2019 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.