தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும். கொரோனா நோய் தொற்றுப் பரவல் தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப் பாட்டில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஊராடங்கு நடைமுறைகள் தொட ங்கி 150 நாட்கள் கடந்த நிலையில் தொழிலகங்களில் 100 சதவீதம் தொழிலாளர்கள் பணிபுரிய லாம், அரசு அலுவலகங்களும் 100 சதவீதப் பணியாளர்களோடு இயங்கும். காட்சி அறைகள் உள்ளிட்ட வர்த்த வளாகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும் முழு அளவில் செயல்பட லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனீர் கடைகள் மற்றும் உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம் என கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுத்ததை அரசு கருத்தில் கொள்ளவில்லை. மெட்ரோ ரயில் இயக்குவதும், மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் பேருந்து களை இயக்குவதும் பொதுமக்களின் நேரத்தை வீணடித்து, பணச் செலவை அதிகரிக்கும் செய லாகும். தமிழ்நாடு முழுவதற்குமான பொதுப் போக்குவரத்தை இயக்குவது மிக, மிக அவசிய மாகும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்ட நிலையில், குற்றவியல் சட்டம் பிரிவு 144ன் படியான தடை உத்தரவு அமலில் இருக்கும் என்பது கேலிக் கூத்தாகும். அரசு நிகழ்ச் சிகளை, ஆளும் கட்சியின் அரசியல் பரப்புகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், எதிர்கட்சி களின் கூட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பது சட்ட அத்துமீறலாகும். கொரோ னா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் அரசியல் ஆதாயம் தேடும் அஇஅதிமுக அரசின் ஜனநாயக விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பொது போக்குவரத்தை அனுமதித்து, சட்ட பூர்வ ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. என இரா. முத்த ரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்