துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் பிளஸ் டூ அறிவியல் பாடத்தில் பள்ளிக்கூட அளவில் முதல் இடம் பெற்ற தமிழக மாணவி

துபாய் ஜெம்ஸ் அவர் ஓன் இந்திய பள்ளிக்கூடத்தில் ஆப்ரீன் ஸஹ்ரா பிளஸ் டூ படித்து வந்தார். இவர் சமீபத்தில் வெளியான பிளஸ் டூ முடிவுகளில் அறிவியல் பாடத்தில் முதல் இடம் பெற்றுள்ளார். ஆப்ரீன் ஸஹ்ரா திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை தப்ரேஸ் ஆலம் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். ஆப்ரீன் ஸஹ்ரா +2 சிபிஎஸ்இ தேர்வு முடிவில் ஜெம்ஸ் அவர் ஓன் இந்தியன் பள்ளிக்கூடத்தில் 96.2% மதிப்பெண்கள் பெற்று அறிவியல் பிரிவில் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார். இவர் மருத்துவம் படித்து மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென்பதே தனது ஆசை என கூறியுள்ளார். அறிவியல் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பள்ளிக்கூட முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.