பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை களைய கலந்துரையாடல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பொதுமக்களுக்கு பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை களையும் பொருட்டு சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.A.K.விசுவநாதன்,IPS., அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி மற்றும் போக்குவரத்து காவல்அதிகாரிகள் கலந்தாய்வுகூட்டம் 17.09.2019 அன்று காலை 11.00 மணிக்கு காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை போக்கு வரத்து காவல் இணை ஆணையாளர் போக்குவரத்து தெற்கு முனைவர் க. எழிலரசன், IPS., அவர்களின் தலைமையில் முதற்கட்டமாக 30 பள்ளிகளின் சார்பாக 60 நபர்கள் கலந்துக் கொண்டனர். இந்தகலந்தாய்வு கூட்டத்தில் பள்ளிகளால் பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்தினை சீர்செய்ய தேவையான அளவு மார்ஷல்கள் மற்றும் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும். பள்ளிவாகனங்கள் சீராகசென்று வரதேவையான தடுப்புதட்டிகள் (Barricade) பயன்படுத்தவேண்டும். School Zone மற்றும் No Parking போன்ற பலகைகள் பள்ளிக்கு அருகில் நிறுவவேண்டும்.

பள்ளி மார்ஷல்களை கொண்டு ஒலிபெருக்கி மூலம் தங்கள் பள்ளி வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிவரும் வாகனங்கள் தங்கள் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே ஏற்றி இறக்கவேண்டும். பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போக்குவரத்து விதிகளை பள்ளி மாணவர் களுக்கு கற்ப்பித்தும் தாங்களும் கடைப்பிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் போக்குவரத்து சீர்ப்படுத்து வதற்கு போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர்.