பள்ளிக்கட்டணம் செலுத்தாததால் காலாண்டு தேர்வு எழுத முடியாத நிலையிலிருந்த பள்ளி மாணவர்களின் துயர் நிலையை துடைத்த காவல்த்துறை ஆணையர்.

வேப்பேரி பகுதியில் உள்ள பெயின்ஸ் மெமொரியல் பேப்டிஸ்ட் மெட்ரிக் குலேசன் உயர்நிலைப்பள்ளியில் 10 வது மற்றும் 12 வது படிக்கும் 16 மாணவர்கள் தங்களது முதல் பருவத்திற்குரிய கல்வி கட்டணத்தை செலுத்ததால் காலாண்டு தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா. விசுவநாதன், இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு தெரிய வந்தது. இது குறித்து நட வடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவைச் சேர்ந்த போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பள்ளி தலைமையாசிரியர் அவர்களை சந்தித்து மேற்படி மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். சமுதாய பணியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவைச் சேர்ந்த துணை ஆணையாளர் அவர்களின் வேண்டு கோளுக் கிணங்க Federation Indian Chamber of Commerce & amp; Industries Ladies Organisation (FICCI-FLO) மேற்படி மாணவர்களின் முதல் பருவ கட்டணத்தை செலுத்த முன்வந்தது.

21.09.2019 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்களின் முன்னிலையில் Federation Indian Chamber of Commerce & Industries Ladies Organisation (FICCI-FLO) தலைவர் திருமதி.தீபாலிகோயல் மற்றும் முன்னாள் தலைவர் திருமதி.சுதாசிவகுமார் ஆகியோர் மேற்படி மாணவர்களுக்கான முதல் பருவ கட்டணமான ரூ.1,17,590/-யை பெயின்ஸ் மெமொரியல் பேப்டிஸ்ட் மெட்ரிக் குலேசன் உயர்நிலைப்பள்ளி முதல்வர் சுகன்யா பெயினிஸ் பிரபு அவர்களிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை நல்லெண்ண ரீதியாக பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு துணை ஆணையாளர் திருமதி.எச். ஜெயலெட்சுமி அவர்கள் ஒருங்கிணைத்தார்.