மதுரை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப.மாணிக்கம் தாகூர்

கடந்த ஜூன் 30 ஜூலை 9 ஜூலை 16 ஆகிய தேதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர்  மூன்று கடிதங்கள் எழுதினேன். அதில் கூறியது என்னவென்றால் மதுரை மற்றும் விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் கிருஷ்ணகிரி சேலம் ஆகிய மாவட்டங்களை பார்வையிட்டது போல் தொடர்ச்சியாக இந்த மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டம் தென் மாவட்டங்களில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுநோய் வருவதை பார்வையிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்படி 40 நாட்களுக்கு பிறகு மாண்புமிகு தமிழக முதல்வர் மதுரைக்கு வருவது அங்குள்ள கொரோனா முகாம்களை பார்வையிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 தமிழக முதல்வருக்கு கடந்த மூன்று கடிதங்களில் மதுரை மற்றும் விருதுநகர் தலைமை மருத்துவமனையில் பரிசோதனை எடுக்கும் மாதிரிகள் முடிவுகள் வருவதில் ஐந்து நாட்களுக்கு மேல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதனால் தொற்று நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன்.அதைப்போல கொரோனா தொற்று நோய் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. எனவே இந்த தொற்றுநோயை உடனடியாக 30 நிமிடங்களில் எடுக்கக்கூடிய ராபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கருவியை தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்று மூன்று கடிதங்களிலும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் தமிழக முதல்வர் அந்த கருவியை வாங்குவதற்கு எந்த முயற்சியும்எடுக்கவில்லை. எனவே இதன் விளைவாக இந்த மதுரை விருதுநகர் மற்றும் தென் மாவட்டங்களில் தொற்றுநோய் அதிகமாக பரவி உள்ளது.

06.8.2020 அன்று மதுரையில் தமிழக முதல்வர் கொரோனா தொற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு பார்வையிட வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதைப்போல தமிழக முதல்வர் விருதுநகரை கடந்து தென்காசி மாவட்டத்திற்கு செல்கிறார். ஏன் இந்த கோபம் தமிழக முதல்வருக்கு? இந்த விருதுநகர் மாவட்டத்தில் தொற்றுநோய் என்பது தொடர்ச்சியாக அதிகரித் துக் கொண்டே இருக்கிறது. எனவே இந்த மாவட்டத்தை பார்வையிடாமல் தமிழக முதல்வர் அவர்கள் கடந்து செல்வது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. விருதுநகர் மாவட் டம் ஆனது ஒரு தொழில் சார்ந்த மாவட்டமாகும். இங்கு உள்ள பொதுமக்கள் கூலி தொழி லை நம்பி வாழ்ந்து வரும் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக பரவி வரும் இந்த தொற்று நோயை தடுப்பதற்கு தமிழக முதல்வர் வரவேண்டும்.இந்த மாவட்ட த்திற்கு தமிழக முதல்வர் ஏன் வர தயங்குகிறார்? தமிழக முதல்வர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு பார்வையிட வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.