ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றி திரிந்த மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த 24.11.2019 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் N-1 ராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேஸ் கார்டன் பகுதியில் 3 நபர்கள் பொது மக்களுக்கு அச் சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாலையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் N-1 ராயபுரம் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை செய்து வந்தனர்.
மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய N -1 ராயபும் காவல்  நிலைய உதவி ஆய்வாளர் திரு.G.செல்வகுமார் தலைமையில் தலைமைக் காவலர்கள் திரு.A.சரவணன் (தா.கா.27354) திரு.S.சதீஷ்குமார், (தா.கா.26583) முதல் நிலைக்காவலர்கள் திரு.A.செந்தில்குமார் (மு.நி.கா.29256), திரு.S.கார்த்திக்கேயன் (மு.நி.கா.31734), ஊர்க்காவல்படை வீரர்கள் திரு.S.காசி (எண்.3256) திரு.M.கார்த்திக் (எண்.4224) திரு.M.அருண்பாலாஜி (எண்.4238) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.விஜயன், வ/33, த/பெ.தனவேல், எண்.3/4, பாலகிருஷ்ணன் நகர், நாகூரான் தோட்டம், புது வண்ணாரப்பேட்டை 2.சூர்யா, வ/21, த/பெ.கோபால், எண்.3/4, பாலகிருஷ்ணன் நகர், நாகூரான் தோட்டம், புதுவண்ணாரப்பேட்டை 3.மனோ, வ/26, த/பெ. நரசிம்மன், எண்.20, 99 வது பிளாக், சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர் ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப் பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்த N-1 ராயபும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.G.செல்வகுமார் தலைமைக்காவலர்கள் திரு.A.சரவணன் (தா.கா.27354) திரு.S.சதீஷ்குமார், முதல் நிலைக்காவலர்கள் திரு.A.செந்தில்குமார் (மு.நி.கா.29256), திரு.S.கார்த்திக்கேயன் (மு.நி.கா.31734), ஊர்க்காவல்படை வீரர்கள் திரு.எஸ்.காசி (எண்.3256) திரு.M. கார்த்திக் (எண்.4224) திரு.எம்.அருண்பாலாஜி (எண்.4238) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 10.12.2019 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.