வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 14 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.10.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 14 நபர்களுக்கு கருணை அடிப்படை யிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றி, பணிக்காலத்தில் உயிhpழக்கும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 12 நபர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் 1 நபருக்கு கிராம உதவியாளர் 1 நபருக்கு அலுவலக உதவியாளர் என மொத்தம் 14 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு பொதுமக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டுமென அறிவுரை வழங்கினார். மேலும், புதிதாக பணியில் சேரவுள்ள இந்நபர்களுக்கு ஒரு வார கால புத்தாக்க பயிற்சி வழங்கிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது)
திரு.எஸ்.சுகுமாரன் உடனிருந்தார்.