விவசாய நீர் பாசனத்துக்குப் புதிய “ஒற்றை சிலிண்டர் மூன்று செயல் பம்ப்”! கலசலிங்கம் பல்கலைப் பேராசிரியர் காப்புரிமை பெற்று சாதனை!!

ஸ்ரீவி.கலசலிங்கம் பல்கலை, ஆட்டமொ பைல் துறை பேராசிரியர் முனைவர் எம்.சிவ சுப்பிர மணியன், விவசாயிகள் நீர் பாசனத் தில் உள்ள இடையூறுகளை சமாளிக்க, குறைந்த மின் ஆற்ற லுடன் அதிக தண்ணீ ரை வழங்கும் ஒரு பம்ப்பை செய்ய முடிவு செய்து, தம்முடன், பேராசி ரியர் கள் கே.மேக் லின்ஜான் வசந்த் ஆர்.ராஜகருணாகரன், மற் றும் மாணவர்கள் என்.பிரதீப்குமார், ஆர். கார்த்திசாமி, இணைந்த குழு, ஒற்றை சிலிண்டர் டிரிபிள் ஆக்டிங் ரெசிபுரோகேட் பம்ப் செய்து, செயல் திறனை பரிசோதனை செய்து, வடிவமைப்பையும் அக்டோபர் 2012 ல், காப்புரிமைக்கு பதிவு செய்தனர்.  இப்புதிய ஒற்றை சிலிண்டர் பம்ப், நீர் உள் இழுப்பதில், இரட்டை சிலிண்டர் பம்ப் அளவிற்கு சம மான நீரை இழுத்து, தொடர்ச்சியாக வழங்கும். இதற்கு 0.5 ஹெச். பி மின்சக்தி போதுமானது. மேலும் மின்சக்தி இல்லாத நேரங்களில் கைமுறையாகவும் இயங்கும் வகையில் பம்ப் வடிவமைக்கபட்டுள்ளது. இதனை ஆகஸ்ட் 21,2020 ல் நடந்த நேர்காணலில், பேராசிரியர் சிவசுப்பிரமணியன், வல்லுனர்கள் முன்னிலையில் விவரித்தார். முடிவில், காப்புரிமை வழங்கி குழுவினரை காப்புரிமை கழகம் பாராட்டியது. இப்புதிய பம்ப் தயாரிக்க ஒரு லட்ச ரூபாய் ஆனதா கவும், அதிக உற்பத்தி செய்தால், பத்தாயிரம் ரூபாயாக குறையலாம் என்றும், சிவசுப்பிரமணி யன் கூறினார். விவசாயத்திற்காக புதிய பம்ப் செய்து காப்புரிமை பெற்று சாதனை புரிந்த குழு வினரை, பல்கலைக்கழக துணை தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த், துணை வேந்தர், பதிவாளர், டீன்கள், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர் .