அவதூறு பரப்புவோரை கைது செய்க – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

பாலின சமத்துவம், தீண்டாமை எதிர்ப்பு, சிறுபான்மை மக்கள் உரிமைகள் தொடர்பான சமூக செயல்பாட்டாளர் பேராசிரியர் சுந்தரவள்ளி, தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக ஊடகங்களிலும் இந்துமத வெறியர்களின் குற்றச் செயல்களை அம்பலப்படுத்தி வருபவர். சாதிவெறி ஆதிக்கத்தை எதிர்த்து களப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருபவர். அறிவியல் கண்ணோட்டத்துடன் பேராசிரியர் சுந்தரவள்ளி முன் வைக்கும் வாதங்களை எதிர் கொள்ள முடியாத நிலையில், அவர் மீது அவதூறுக் குப்பைகளை அள்ளி வீசும் இழி செயலில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர். கருத்துரிமையை பறிக்க அச்சுறுத்தலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கொள்கை திறனில்லாத கோழைகளின் குற்றச் செயல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் பேராசிரியர் சுந்தரவள்ளி புகார் கொடுத்துள்ளார். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.
அன்புள்ள

(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்