தமிழ் தெரியாதவர் – தமிழ்நாட்டில் நீதிபதிகளா? கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜக – மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு அரசு கூட்டமைப்பு, அரசியல் அமைப்பு நிறுவனங்கள், வரலாற்று ஆய்வு மைப்புகள், அறிவியல் ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் மத வாத சக்திகளை பணியில் அமர்த்தி வருகிறது. இந்துத்துவக் கருத்தியலின் ‘இந்து ராஷ்டிராவைக்’ கட்டமைக்கும் தீய நோக்கத்துடன் நீதித்துறையில் தலையீடு செய் வதை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்கள், தமிழ்நாட்டின் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்ற வழிவகுக்கும் நீதிபதிகள் பணித் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணிவாளர் தேர்வாணை யம் அறிவித்திருக்கிறது. கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவர்கள், அரை குறை தமிழ் தெரிந்தவர்கள் நீதிபதிகளானால் எண்ணிப் பார்க்க முடியாத எதிர் விளைவுகள் ஏற்படும். நடைமுறையில் உள்ள நீதிபரிபாலன முறையினையும், கட்டமைப்பையும் சீர்குலைக்கும் பாஜக மத்திய அரசின் செயலை இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் சட்டம் பயின் றுள்ள, பயின்று வரும் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதுடன், சாமா னிய மக்கள் பாரம்பரிய வாழ்க்கை முறை, தமிழர் சமூக வாழ்வின் பழக்க, வழக்கம் உள்ளிட்ட பண்பாட்டு மரபுகளை உள்வாங்க முடியாதவர்கள் கீழமை நீதிமன்றங் களில் நீதிபதிளாகும் பேரபாயம் ஏற்பட்டிருக்காது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணயாளர் தேர்வாணயம் வெளியிட் டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனி ஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.