மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு சான்றிதழும் வெற்றிக் கோப்பையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

08 09 19 பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த 10 நாட்களக மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி முகாம்களில் பங்கேற்ற வீரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் நட்சத்திரம் பதித்த கருப்பு பெல்ட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா பேவ்ரி நகரில் உள்ள சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் தலைமையகத்தில் மாஸ்டர் மேத்யூ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்றுவித்த சிறந்த பயிற்சியாளர் மற்றும் சிறந்த நடுவர் மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு சான்றிதழும் வெற்றிக் கோப்பையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.