“காழ்வை” மலர் (Eagle Wood)

நேற்று ஆரமாக சந்தனம் பார்த்தோம். இன்று, இதன் அருகிலேயே காழ்வை எனும் ‘அகில்’ மலரைக் காண்கிறோம். நறுமணத்திற்கு சொல்லவா வேண்டும்?. காழ் வைரத்தைக் குறிக்கும். வைரம் கெட்டித்தனத்தைக் குறிக்கும். காழ் பூவும் வன்மையானது. காழ்வை அகில் கட்டையைக் குறிக்கும். இதன் தண்டுப் பகுதியில் சுரக்கும் பிசின் நறுமணம் மிகுந்தது. இதிலும் சில ஆய்வாளர்கள், முதிர்ச்சி பெற்ற மரங்களின் உட்பகுதியில் கரு நிறக் கட்டிகளில் உருவாகும் எண்ணெய்ப் பசையே பிசின் என்பர். இதுவே அகில் எனவும் கூறுவர். அகில் மரத்துண்டுகளை நீரில் கொதிக்க வைத்தால் நறுமண எண்ணெய் வரும். இவை பிரித்தெடுக்கப்பட்டு அகர் அத்தர் எனும் நறுமண எண்ணெய்யாக பயன்படுத்தப்படுகிறது. உம்…. அட… பட்டு ஜிப்பா அணிந்து கொண்டு, மைனர் செயின் போட்டுக் கொண்டு அகில் அத்தரை பூசிக்கொண்டு, அட, கெளம்பிட்டாங்கய்யா… – கெளம்பிட்டாங்கய்யா

.. வே. அரசு – பெங்களூரு