65 ஆண்டுகள் தொடர்ந்து பொது நலத்திலும், சமூக நலத்திலும் பாடுபட்டுவரும் சமூக ஆர்வலர் தியாகி. துமிழ்மகன் உசேனுக்கு “டாக்டர்” பட்டம் யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேசன் வித்யாபித் (அகில உலக பத்திரிக்கைஊடக சங்கம்) வழங்கியது.

சென்னையில் செயல்பட்டு வரும், அகில உலக பத்திரிக்கை ஊடக சங்கம் (யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேசன் வித்யாபித்) ஆண்டு தோறும் விழா நடத்தி, சமூக நல ஆர்வலர்களை தேர்ந்தெடுத்து, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறார்கள்.

இந்த ஆண்டுவிழா, அம்பத்தூர் சாலை, சூரப்பேட்டை அக்குவா கிரீன் ஹோட்டலில் வைத்து இயக்குநர் வழக்கறிஞர் டாக்டர் ஆர்.விஜய்ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ஏ.கணேசன், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு பீளிடர் டாக்டர் சூரிய நாராயணன், பேராசிரியர் டாக்டர் வி.ரவிக்குமார், வழக்கறிஞர் டாக்டர் வி.ராமலிங்கம் முன்னிலையில், 65 ஆண்டுகள் தொடர்ந்து பொது நலத்திலும், சமூக நலத்திலும் பாடுபட்டு வரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தியாகி அ.தமிழ்மகன் உசேனுக்கு, முன்னாள் தலைமை நீதிபதி ஏ.கணேசன் அவர்கள் “டாக்டர்” பட்டத்தையும், நினைவு பரிசையும் வழங்கினார். இயக்குநர் ஆர்.விஜய்ஆனந்த், தியாகி அ. தமிழ்மகன் உசேனுக்கு தங்க பதக்கம் அணிவித்து பாராட்டினார். இயக்குநர் டாக்டர் சலீம் பாஷா நன்றி கூறினார்.