தொலைக்காட்சித் தொடரின் நாயகன் சித்து அறிமுகமாகும் திரைப்படம் ‘அகோரி ‘

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து. இவர்  நடித்த திருமணம், ராஜா ராணி போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்அகோரி‘.  இதுவரை சின்னத்திரை மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், பெரிய திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளதால், தான் அறிமுகம் ஆகியுள்ள இந்தப் படத்தைப் பெரிதும் நம்பி யிருக்கிறார்சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும்அகோரிபடம் உருவாகியிருக்கிறது.*******

இவர்களைப் போலவே தங்களது நடிப்பின் மூலம் முந்தைய படங்களின் வழியாகச் சிறந்த நடிப்புக் கலைஞர்களாகத் தடம் பதித்த குணச்சித்திர நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன்   தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுகஇயக்குநர் D.S. ராஜ்குமார் .சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும்  நடக்கும்  போராட்டமே கதை.

இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான  வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது. இப்படத்தில் ஹரித்துவார் செட் அமைத்து  அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி, மற்றும்கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன.

படத்தில் இடம்பெறும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில்சஹாபடத்தின் மூலம்  புகழ் பெற்ற ஜக்குல்லா பாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வருகிறார். இவரதுஉயரம் 6.5 ” ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர் கர்நாடக மாநில அரசின் விருதுபெற்றவர்.இவர்  ‘144’ பட நாயகியும் கூட. இவர்களுடன் மைம் கோபி,  டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி,கார்த்தி, ‘கலக்கப்போவதுயாருசரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில்  நடித்திருக்கிறார்கள்.