‘ஜெய் விஜயம்’ திரைப்பட விமர்சனம்

ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயசதீஷன் நாகேஸ்வரன் இயக்கத்தில் ஜெய் ஆகாஷ், அக்‌ஷயா கண்டமுதன், ஏ.சி.பி.ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், திவாஹர், டாக்டர் சரவணன், பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜெய் விஜயம்”. 2022ஆம் ஆண்டில் ஆகாஷ்க்கு ஒரு கார் விபத்து நடக்கிறது. இந்த விபத்தால் 2012 க்குப் பிறகு 10 ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை மறந்துவிடுகிறார். மறந்துபோன ஆண்டில் ஆகாஷ் இரட்டை கொலை செய்திருக்கிறார் என்று போலீசார் அவரை பிடிக்கிறார்கள். ஆனால் ஆகாஷ் அதை மறுக்கிறார். மறந்துபோன ஆண்டுகளின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவர போலீசார் பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். அவர் சுயநினைவுக்கு வந்தாரா?  கொலை செய்தாரா? என்பதுதான் கதை. அருமையான துப்பறியும் கதை. அதை திரையில் காட்ட தவறிவிட்டார் இயக்குநர். படத்தின் முன்பகுதிவரை ஒரே மேகமூட்டமும் ஒரே தொணியில் ஒலிக்கும் இசையும் படத்தை வெறுப்படைய செய்கிறது. படத்தின் பின்பாதியில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டதிலும் ரசிக்கும்படி இல்லை. ஆகாஷின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்கிறது. நடிகை அக்‌ஷயா கண்டமுதன் தமிழ் திரையுலகில் வலம்வர வாய்ப்பு உள்ளது. நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதினில் எறிந்தனர்.