தமிழ்நாடு முதலமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள 1260 குடியிருப்புகளை  கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக   திறந்து வைத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சு மிமதுசூதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதிவாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள் இன்று (20.11.2023) காணொளி காட்சி வாயிலாக   திறந்து வைத்தார்.

இத்திட்டத்திற்கு 14.02.2019 அன்று நடைபெற்ற மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்புக் குழுவின் (CSMC) 42 ஆவது கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முருகமங்கலம் பகுதியில்  1260 அடுக்குமாடி குடியிருப்புகள் 3.3 ஹெக்டர் பரப்பளவில் ரூ.151.94 கோடி மதிப்பீட்டில் 1260 குடியிருப்புகளைகொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த குடியிருப்புகள்  பொருளாதாரத்தில் நலிவுற்றநகர்ப்புற ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு குடியிருப்பும் தோராயமாக 400 சதுர அடி பரப்பளவில் நல்ல காற்றோட்ட வசதியுடன் கூடிய வசிப்பறை, படுக்கையறை, சமையலறைகுளியலறை, கழிவறை மற்றும் வராண்டா ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. எல்லா குடியிருப்புகளும் தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகிய அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்இத்திட்டப்பகுதியில் மின் தூக்கி – 17, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் –1, சமுதாய நலக்கூடம் – 1, ஆரம்பசுகாதார நிலையம் – 1, தொடக்கப்பள்ளி – 1, நியாய விலைக்கடை -1, கடைகள் – 12, அங்கன்வாடி – 2, பால்அங்காடி– 2 மற்றும் காவல் சாவடி-1 ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்ட ப்பகுதியில் மழைநீர் சேகரிப்புஅமைப்பு, கட்டிடங்களை சுற்றி பேவர் பிளாக் நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

 இந்நிகழ்ச்சியில், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி. உதயாகருணாகரன், துணைத்தலைவர் திரு.ஆராமுதன், முருகமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் திரு.இளங்கோ, ஊராட்சிமன்றத்தலைவர் திருமதி. செல்வசுந்தரி ராஜேந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்