துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.2 கோடி தங்கம் கடத்தல்

உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கடந்த சனிக்கிழமை (18.02.2023) துபாயிலிருந்து வந்த விமானப்பயணிகள் இருவரை இடைமறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ.31.62 லட்சம் மதிப்பிலான 630 கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானப்பயணி ஒருவரை வழிமறித்து விசாரணை செய்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த ரூ.37.34 லட்சம் மதிப்பிலான 744 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (19.02.2023) துபாயிலிருந்து வந்த மற்றும் ஒரு விமானப்பயணி ஒருவரை இடைமறித்து விசாரணை செய்ததில், அவரிடம் ரூ.39.75 லட்சம் மதிப்பிலான 792 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (19.02.2023) துபாயிலிருந்து வந்த மற்றும் ஒரு விமானப்பயணி ஒருவரை இடைமறித்து விசாரணை செய்ததில், அவரிடம் ரூ.30.71 லட்சம் மதிப்பிலான 612 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (19.02.2023) கொழும்புவிலிருந்து துபாயிலிருந்து வந்த மற்றும் ஒரு விமானப்பயணி ஒருவரை இடைமறித்து விசாரணை செய்ததில், அவரிடம் ரூ.19.57 லட்சம் மதிப்பிலான 390 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மொத்தத்தில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால்  ரூ.2.02 கோடி மதிப்புள்ள 4.03 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக விசாரனை நடைபெற்று வருவதாக,   சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு. எம் மேத்யூ ஜாலி  தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.