கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, எம்.பி., ஆகியோர் நேரில் வந்து மலர்தூவி மரியாதைசெலுத்தினர்.

கலைஞர் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற தி.மு.கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி, எம்.பி., ஆகியோர் நேரில் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதுபோது திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.