துப்பறியும் அதிகாரியாக கிஷோர் நடிக்கும் படம் “ட்ராமா”

அஜூ  கிழுமலா  இயக்கத்தில் கிஷோர் குமார் நாயகனாக நடித்திருக்கும் படம் “ட்ராமா”.  படம் முழுவதையும் காவல் நிலையத்திலேயே சிங்கிள் சார்ட்டில் படமாக்கியுள்ளார்கள். பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைகிறார்கள் ஒரு காதல் ஜோடி.  காவல் நிலைய்த்தில் உதவி ஆய்வாளர் தனது காதலியின் பிறந்தநாளை கொண்டாடும்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அந்த இருட்டில் ஏட்டைய்யா சார்லி கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார் என்பதை காவல் மேலதிகாரி கிஷோர் குமார் எப்படி கண்டு பிடித்தார் என்பதுதான் கதை.  உச்சக்கட்ட காட்சியில் பாதுகாப்பு கேட்ட. வந்த காதலியின் நடிப்பு மிக அருமையாக இருக்கிறது. உணர்ச்சி கொப்பளங்கள் முகத்தில் வெடித்து வசனம் பேசும் காட்சிகள் கைத்தட்ட வைக்கிறது. மனோகராவில் கண்ணம்மாவையும் பூம்புகாரில் விஜயகுமாரியையும் நினைவு படுத்துகிறார் அந்த புதுமுக இளம் நடிகை*****

கிஷோர் குமாரின் மிடுக்கான நடிப்பும் மற்ற காவலர்களின் யதார்த்த நடிப்பும் பாராட்டக்குரியது.  உயர் அதிகாரி காவல் நிலையத்தில் இருக்கும் போதே காவலர்கள் அதிக சத்தத்துடன் சண்டையிடுவது நம்பும்படியாக இல்லை. எரிச்சலையூட்டுகிறது.