ஹன்சிகா நடிப்பில் மார்ச் 8ல் வெளியாகும் படம் ‘கார்டியன்’

ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ளகார்டியன்திரைப்படத்தின் வெள்ளோட்ட காணொளி கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த காணொளிக் காட்சியில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன்கூடிய காட்சிகளும் அமைந்துள்ளனஇத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக்  வினோத், ஸ்ரீராம்பார்த்தசாரதி, ‘மொட்டைராஜேந்திரன், பிரதீப் ராயன், ‘டைகர் கார்டன்தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர். இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ளனர். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.**********

இந்நிறுவனத்தின் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார். இப்படத்திற்குசாம் C.S மிரட்டலான இசையை அமைத்துள்ளார். இப்படத்திற்கான ஒளிப்பதிவாளராக K.A.சக்திவேல்மற்றும் படத்தொகுப்பாளராக M.தியாகராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இப்படத்தின் இயக்குநர்
குரு சரவணன்  பேசும் பொழுது,” தமிழுக்கும், கடவுளுக்கும், எங்களது குருநாதர் திரு.கே. எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கடவுள் கொடுத்தவரம் என்னவென்றால் திரு.கே. எஸ்.ரவிக்குமார் எங்களை அவரிடம் சேர்த்துக்கொண்டதுதான்.தயாரிப்பாளர் விஜயசந்தர் எங்களுக்கு நீண்ட நாள் நண்பர் தான். கூகுள் குட்டப்பாதிரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதே, தயாரிப்பு நிறுவனம் தொடங்கவிருப்பதையும்இணைந்து பணிபுரியலாம் என்றும் கூறினார்.நானும் சபரியும் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறந்த நண்பர்கள் இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். கதையை தயாரிப்பாளர்,அவரது குழுவினர்மற்றும் ஹன்ஷிகாவிடமும்  கூறி ஒப்புதல் பெற்றோம்.பின்னர் எங்கள் குருநாதரிடம் இதைக் கூறி, ஆசிபெற்றோம்.கதாநாயகி ஹன்ஷிகா,கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, இசையமைப்பாளர் சாம் C.S. ஆகியோர் ஏற்கனவே தங்களை நிரூபித்தவர்கள்தான். இந்த படத்திற்ககு எந்த அளவுக்கு சிறப்பானஉழைப்பை அளிக்க முடியுமோ அளித்துள்ளார்கள்.படத்தில் உள்ள அனைத்து நடிகர், நடிகையருக்கும்தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி கூறினார்.படத்தின் தயாரிப்பு குழுவினருக்கும் நன்றிதெரிவித்துக் கொண்டார்.ஹாரர் திரைப்படத்தை சிறந்த திரைக்கதையுடன் உணர்வுப் பூர்வமானகதைக்களத்துடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படமாக உருவாக்கி உள்ளோம்.ஊடகத்துறையினரின் ஆதரவை வேண்டுகிறோம். ஊடகத் துறையினருக்கு நன்றிஎன பேசினார்.