‘மாமரம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஜெய் ஆகாஷ் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி விரைவில்வெளியாகவுள்ள படம் மாமரம்.’ இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய ஜெய் ஆகாஷ், “ கியூப் மூவி ஆப்  என்பது நானும் சில முதலீட்டார்களும் இணைந்த. உருவாக்கிய ஆப். அதில், நான் நடித்து சமீபத்தில் வெளியான ஜெய் விஜயம் படத்தை வெளியான மூன்றுநாட்களில் மூன்று லட்சம் பார்த்தார்கள். இப்போதுவரை 5 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். அதனால் கியூப்மூவி ஆப்பின் இன்வெஸ்டர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்..*********

அந்த மகிழ்ச்சியை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறோம். தியேட்டரிலும் ஜெய் விஜயம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் மூலம்இரண்டாவது வாரத்தில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அடுத்ததாக மாமரம். இந்த படம் மேக்கிங்காக பார்த்தால் கனவுப் படைப்பு; சாதனைப் படைப்பு. கதைஎன்னுடைய சொந்த லவ் ஸ்டோரி. அதில் சினிமாவுக்காக 20% மட்டும் மற்றியுள்ளேன். மற்றபடி படத்தில்நீங்கள் பார்க்கப் போகிற அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்தவைதான். நிஜத்தில் என் காதலி பணத்துக்குஆசைப்பட்டு என்னை விட்டுப் பிரிந்திருந்தாலும், நான் அதை இந்த கதையில் பாசிடிவாக வைத்திருக்கிறேன். மாமரம் என்ற தலைப்பை எதற்காக வைத்துள்ளோம் என்பது டிரெய்லர் பார்த்தால் புரியும். படத்தில் காதலர்கள்மாம்பழக் கொட்டையை நட்டு வைத்து அது மரமாக வளர்ந்து அவர்கள் காதலின் நினைவுச் சின்னமாகஇருக்கும்.

காதலின் வலியை உணர்த்துகிற கதை, அது என் சொந்தக் கதை. அதனால் உணர்வுபூர்வமாக நடித்தபோது அழவேண்டிய காட்சிகளில் கிளிசரின் போடமலேயே அழுதேன்.

அது மட்டுமில்லாமல், படத்தில் இன்னொரு சஸ்பென்ஸும் இருக்கிறது. அது, காதல்வசப்பட்ட, வசப்படுகிறஎல்லோரின் மனதையும் தொடும் விதத்தில் இருக்கும்.

இது 2012-ம் ஆண்டில் படப்பிடிப்பு துவங்கப்பட்ட படம். கதாநாயகனின் 25 வயதிலிருந்து 40 வயதுவரையிலான காலகட்டத்தில் நடக்கும் கதை. இப்படியான கதையில் கதாநாயகனின் இளவயதுகதாபாத்திரத்துக்கு வேறு நபரை நடிக்க வைப்பார்கள்; அல்லது ஒரே நபரே இளவயதுக்காரராகவும் நடித்துதொழில்நுட்பத்தின் மூலம் வயதைக் குறைத்துக் காட்டுவார்கள். ஆனால், நான் அப்படி எதையும் செய்யாமல், என் இளவயதில் இளவயது கதாபாத்திரத்தில் நடித்தேன். பத்து வருடங்கள் கழித்து நடுத்தர வயதுகதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த வகையில் பார்த்தால் இந்த படத்துடன் 10 வருடங்களுக்கு மேலாகபயணித்துள்ளேன்.

படத்தில் என்னுடன் நடித்தவர்களும் அப்படியே வருடக்கணக்கில் காத்திருந்து நடித்துக் கொடுத்தார்கள். அதில்ஒருவரான சித்திரம் பாஷா என்பவர் 10 வருடங்கள் முன் நடித்தபோது, அடுத்தடுத்த சீன்கள் எப்போதுஎடுப்பீர்கள்?’ என கேட்டார். 10 வருடங்கள் கழித்து எடுப்போம்என்றேன். அவர் பதறிப் போய், நாளைக்குஎன்ன ஆகும்னே தெரியாது; 10 வருஷம் கழிச்சு நான் இருப்பேனாங்கிறதே தெரியாதேஎன்கிற அளவுக்குபேசினார். அவருக்கு இடையில் விபத்து ஏற்பட்டு மீண்டு வந்தார். பத்து வருடங்கள் கழித்து மிச்சமுள்ளகாட்சிகளில் நடித்தார். இப்படி இந்த படம் எனக்கு பல வித அனுபவங்களைத் தந்தது.

இந்த படத்தை நான் 2012-ல் துவங்கினேன். 2014-ல் அமெரிக்காவில் கதாநாயகனின் 12 வருடகாலகட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட போய்ஹூட்என்ற படம் ஆஸ்கர் அவார்டு பெற்றது. அதே பாணியிலானபடமென்பதால் மாமரம் படம் மீது பெரிய நம்பிக்கை வந்தது. போய்ஹூட்லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டபடம். ஆனால், மாமரம் இதுவரை வந்த எனது படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம். பாடல்களுக்காக லண்டன் உள்ளிட்ட இடங்களுக்குப் போய் வந்தோம். இந்த படத்துக்கு வேறு யாரும்தயாரிப்பாளராக இருந்திருந்தால் அவர்களிடமிருந்து பத்து வருட கால காத்திருப்பு, ஒத்துழைப்புகிடைத்திருக்காது. நானே தயாரிப்பாளர் என்பதால் படத்தை நினைத்தபடி எடுக்க முடிந்தது.

பிதாமகன் படத்தில் விக்ரம் நடித்த கேரக்டர் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதை மனதில்வைத்து மாமரம் படத்தில் அப்படியான கேரக்டரிலும் நடித்துள்ளேன்.

மாமரம் படம் கியூப் மூவி ஆப்பில் வெளியாகும். ஆனால், ஆப்பில் எல்லோராலும் பார்க்க முடியாது. ஸ்மார்ட்போன் இல்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் தியேட்டரில்தான் படங்களைப் பார்க்கிறார்கள். அதற்கேற்றபடி படம் தியேட்டரிலும் வெளியாக வேண்டும். அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில்வெளியிடுவதற்கு விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் ஆதரவளிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சிக்கு பிரபலங்களை அழைக்காமல், ஆப் இன்வெஸ்டர்களையும், என்னுடைய ஃபேன்ஸ் கிளப்நிர்வாகிகளையும் அழைத்திருக்கிறேன். பிரபலங்கள் வந்தால் அவர்களின் பாப்புலாரிட்டிக்காக நிகழ்ச்சிக்குசம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். கடந்த முறை என்னுடைய படவிழாவிலும்அப்படி நடந்தது. நிகழ்ச்சியில் பேசியவர் என்னை பெரியளவில் பாராட்டினார்; மட்டுமல்லாமல் எனக்கு பிடித்ததல அஜித் பற்றி தவறாக பேசியது மன கஷ்டத்தை உருவாக்கியது. அதையெல்லாம் தவிர்க்கவே என்நண்பர்கள், என் படம் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறவர்களை அழைத்தேன். அடுத்தடுத்த படத்திற்கும்அப்படியே செய்ய நினைத்துள்ளேன். படத்தில் எனக்கு நண்பராக நடித்த காதல் சுகுமாரிலிருந்து அனைத்து நடிகர், நடிகைகளுக்கும்தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றிஎன்றார்.