புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

சென்னைவில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில்மிக்ஜாம்புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தமிழ்நாடு முன்னாள்முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான . பன்னீர்செல்வம் M.L.A., ஆறுதல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான அரிசி, பாய், போர்வை, துண்டு மற்றும் குடம் போன்ற பொருட்களை வழங்கினார்.

வடசென்னை வடக்கு மேற்கு செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டின் பேரில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.