குடாச்சாரி 2 படத்தில் நடிகை பனிதா சந்து நாயகியாக நடிக்கிறார்

நடிகர் அதிதி சேஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம்ஜி2’ இப்படத்தின் பதாகை அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் நாயகி யார்? என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ‘குடாச்சாரி 2′ எனும் இந்த படத்தில் நாயகன் அதிவிஷேஷுக்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து நடிக்கிறார் என்ற செய்தியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாகஅறிவித்திருக்கிறார்கள்.‌ இது தொடர்பாக நடிகை பனிதா சந்து பேசுகையில், ” இது என்னுடைய முதல் பான் இந்திய திரைப்படமாகும். இதுபோன்ற நம்ப முடியாத தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.. பார்வையாளர்கள் என்னை முற்றிலும் புதிய அவதாரத்தில் திரையில் பார்க்கவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆக்கபூர்வமான மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவமாக இருக்கும். ” என்றார்.****